;
Athirady Tamil News

ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு எதிராக வலுத்த ஆசிரியர்களின் திடீர் போராட்டம்!!

0

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதிவான் நீதமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது.

கடந்த மே மாதம் 28ஆம் தேதி நீதிமன்ற உத்தரவை மீறி, ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டார் எனும் குற்றச்சாட்டின் பேரில், நேற்று முன்தினம் ஜோசப் ஸ்டாலினை பொலிஸார் கைது செய்தனர்.

அரசாங்கத்துக்கு எதிரான ‘கோட்டா கோ கம’ போராட்டக்களத்தின் 50ஆவது தினத்தையொட்டி, கடந்த மே 28ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் ஜோசப் ஸ்டாலின் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஜோசப் ஸ்டாலின் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, அவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பல முனைகளில் எதிர்ப்பு

இந்த நிலையில் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு பல்வேறு தரப்புகளிலிருந்தும் கண்டனங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த கைது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் காப்பாளர்கள் தொடர்பான விசேட அறிக்கையாளர் மேரி லோலர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

‘ஜோசப் ஸ்டாலின் போன்ற மனித உரிமை பாதுகாவலர்களின் பணி, முன்னெப்போதையும் விடவும் சமீப வாரங்களில் முக்கியமானது’ என தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள மேரி லோலர்; ‘மனித உரிமைப் பாதுகாவலர்களின் இத்தகைய செயல்கள் பாதுகாக்கப்பட வேண்டுமேயொழிய, தண்டிக்கப்படக் கூடாது’ எனவும் தெரிவித்துள்ளார்.

ஜோசப் ஸ்டாலின் கைது குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், “அரசாங்கத்துக்கு எதிரான போட்டங்களை வழிநடத்திய தலைவர்களை தற்போது அரசாங்கம் வேட்டையாடுகிறது,” என்றார்.

“கைது செய்யப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் – முன்னிலையிலிருந்து செயற்படுகின்றதொரு தொழிற்சங்க வீரர். அவரைக் கைது செய்தமையை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம். இப்படியான கைதுகள் மூலம், தற்போதைய பொருளாதார பிரச்சினையிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது” எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வி. ராதாகிருஷ்ணன், இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டிப்பதாகக் கூறினார்.

“ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருந்தபோது; ஜோசப் ஸ்டாலினை கைது செய்யப் கூடாது என்றார். ஸ்டாலினை கைது செய்தால் அல்லது அவரின் போராட்டத்தை அச்சுறுத்தினால், இலங்கைக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கிடைக்கும் ஜஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாமல் போய்விடும் என நாடாளுமன்றில் ரணில் கூறினார். ஆனால், அதே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானவுடன் ஸ்டாலினை கைது செய்துள்ளார்” என தெரிவித்தார்.

இதேவேளை, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அவரை விடுவிக்குமாறு கோரியும், நாட்டின் பல பாகங்களிலும் நேற்றைய தினம் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

கண்டி, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறன ஆர்ப்பாடங்கள் இடம்பெற்றன.

கொழும்பு – கோட்டே ரயில் நிலையத்துக்கு முன்பாகவும் தொழிற்சங்கங்கள் இணைந்து, ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிடும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டன.

ஜோசப் ஸ்டான் கைது செய்யப்பட்டமை அரச பயங்கரவாதச் செயற்பாடு எனத் தெரிவித்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் இங்கு பதாதைகளை ஏந்தியிருந்தனர்.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ள தமது செயலாளரை விடுவிக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ரணிலுக்கு எதிராக விமர்சனம்

இது இவ்வாறிருக்க, ஜோசப் ஸ்டாரின் கைது விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது கோரமான இரட்டை முகத்தை வெளிப்படுத்தியுள்ளார் என, ஒரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் முன்னாள் உறுப்பினரும், சமூக செயற்பாட்டாளருமான அஸீஸ் நிஸாருத்தீன் தெரிவித்துள்ளார்.

“கடந்த மே மாதம் 28ஆம் தேதி ‘அரகலய’ (போராட்டம்) 50ஆம் நாள் நிறைவையொட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதை காரணம் காட்டி, இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், இதே ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சமன் ரத்னபிரிய என்பவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதவியொன்றை வழங்கியுள்ளார்,” என அஸீஸ் நிஸாருத்தீன் குறிப்பிட்டுள்ளார்.

“சமன் ரத்னப்பிரிய என்பவர் ரணில் விக்ரமசிங்க தலைமை தாங்கும் ஐக்கிய தேசிய கட்சியின் சுகாதார தொழிற் சங்கத் தலைவாராக உள்ளார்.

இவர் சில தினங்களுக்கு முன்னா் ரணில் விக்ரமசிங்கவினால், ‘ஜனாதிபதி தொழிற்சங்கங்களின் பணிப்பாளர் நாயகம்’ எனும் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜோசப் ஸ்டாலினை கைது செய்துள்ள ரணிலின் காவல்துறை, ரத்ன பிரியவையும் கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு உயர் பதவி ஒன்றை ரணில் வழங்கினார்.

இது தவிர, கொரோனா காலத்தில் 2021ஆம் ஆண்டு ஆர்ப்பாட்டம் செய்தார் எனும் குற்றச்சாட்டின் பேரில் ஜோசப் ஸ்டாலின் – அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய அரசாங்கத்தில் கைது செய்யப்பட்ட போது, ரணில் கொதித்தெழுந்தார். ஜோசப் ஸ்டானின் கைதுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரலெழுப்பினார்.

‘ஜோசப் போன்றவா்களை கைது செய்வதால் இந்நாட்டுக்கு சா்வதேசத்தின் உதவிகள் கிடைக்காமல் போகும், ஜிஎஸ்பி பிளஸ் சலுகையும் இல்லாமல் போகும் என்று நாடாளுமன்றத்தில் முழக்கமிட்டு- கோட்டா அரசாங்கத்தை கடுமையாக ரணில் விமர்சித்தார்.

ஆனால் அவரே தற்போது பிரபல தொழிற் சங்கவாதியான ஜோசப் ஸ்டாலினை கைது செய்து – ஜனநாயகத்துக்கு எதிராக தனது மற்றுமொரு நடவடிக்கையை அரங்கேற்றியுள்ளார்” என, அஸீர் நிஸாருத்தீன் மேலும் தெரிவித்துள்ளார்.’அரகலய’வின் (போராட்டத்தின்) புண்ணியத்தால் – தந்திரமாக ஆட்சியைப் பிடித்துக் கொண்ட ரணில், பதவிப் பித்து தலைக்கேறி செயற்பட்டு வருகிறார் எனக் குறிப்பிட்டுள்ள நிஸாருத்தீன்; “நிறைவேற்று அதிகாரம் ரணிலுக்கு கிடைத்திருப்பது குரங்கின் கைக்கு கத்தி ஒன்று கிடைத்ததற்கு ஒப்பானதாகும்” எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஜோசப் ஸ்டாலினை கைது செய்திருப்பதன் மூலம், ரணிலின் இரட்டை கோர முகமும், அவரின் ஜனநாயக விரோத செயற்பாடுகளும் நாளுக்கு நாள் அம்பலத்திற்கு வந்து கொண்டிருப்பதாகவும் நிஸாருத்தின் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்கம்

இலங்கை ஆசிரியர் சங்கம் 1952ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. இதன் தலைவராக ஜயந்த பெனாண்டோ என்பவரும், பொதுச் செயலாளராக ஜோசப் ஸ்டாலினும் பணியாற்றி வருகின்றனர்.

இலங்கை ஆசியர் சங்கமானது ஆசிரியர் நலன்களுக்காக உழைப்பதோடு நின்றுவிடாமல், இலங்கையிலுள்ள அரச ஊழியர்களின் தொழிற் சங்கங்களுடன் இணைந்து, அவர்களின் நலன்களுக்காகவும் பணியாற்றி வருவதாக, அச் சங்கத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஏ. அபாஜுல்பான் கூறுகிறார்.

“இலங்கை மக்களின் நலன்களுக்காக சமூக, பொருளாதார மற்றும் அரசியல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இலங்கை ஆசிரியர் சங்கம் செயற்பட்டு வருகின்றது. ஆனால், எமது சங்கம் எந்தவொரு அரசியல் கட்சியையும் சாராதது” எனவும் அபாஜுல்பான் குறிப்பிட்டார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

அதிபர் மாளிகையில் கைப்பற்றப்பட்ட கோடிக்கணக்கான பணம்..இலங்கை கோர்டில் ஒப்படைப்பு!! (படங்கள்)

”காலி முகத்திடலை” காலி பண்ண முடியாது. . இலங்கை அரசுக்கு எதிராக போராட்டக்காரர்கள் போர்க்கொடி!! (படங்கள்)

கைது செய்வதைத் தடுக்க ஜீவந்த பீரிஸ் மனு !!

ரணிலை நீக்குவதா? இல்லை? தீர்மானம் ஒத்திவைப்பு !!

இலங்கைக்கு வரும் சீனாவின் உளவு கப்பல்… ரணில் விக்கிரமசிங்கேவுக்கு இடியாப்ப சிக்கல்!

‘கோத்தபயவிடம் பேசிட்டுதான் இருக்கேன்’ இப்போதைக்கு நாடு திரும்பமாட்டார். .இலங்கை அதிபர் ரணில் பேச்சு!! (படங்கள்)

இவர் தான் தலைவர்; மொட்டுக் கட்சி அறிவிப்பு !!

’கோட்டாபய வந்தால் வரவேற்கப்படுவார்’ !!

2 ராஜபக்‌ஷர்களுக்கு பயணத்தடை நீடிப்பு !!

செய்திகளை முற்றாக மறுத்தார் சஜித் !!

ஐ.தே.கவுக்கு தாவ பல எம்.பிக்கள் முஸ்தீபு !!

அம்பாந்தோட்டா துறைமுகத்துக்கு சீனாவின் உளவு கப்பல்- ஒருவழியாக ஒப்புக் கொண்டது இலங்கை.. ஆனால்?

இலங்கை பொருளாதாரம் : அடுத்த 6 மாதங்களில் வரிசைகட்டி நிற்கும் பிரச்னைகள்!! (படங்கள்)

’வந்து எனக்கு வீடு கட்டித் தாருங்கள்’

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

இலங்கை மக்களுக்கு உதவி செய்ய தயார்: இந்திய ஜனாதிபதி !!

கடும் பொருளாதார நெருக்கடி; இலங்கைக்கு உதவ முடியாது. . கை விரித்த உலக வங்கி!! (படங்கள்)

அமரகீர்த்தி கொலை வழக்கு; மேலும் 8 பேருக்கு வலைவீச்சு!! (வீடியோ)

சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் அழைப்பு!!

காலிமுகத்திடல் போராட்டத்தில் இருந்து விலகும் அமைப்பு!!

ஆர்ப்பாட்டகாரர்களுக்கு ஆதரவாக மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!!

போராட்டத்திலிருந்து விலகியது ‘ப்ளக் கெப்’ !!

சிறைச்சாலையை தயார்ப்படுத்துங்கள் !!

அவசரகால சட்டத்தால் சர்வதேச உதவிகளை இலக்கும் அபாயம் !!

தேசிய வங்கிக்கட்டமைப்பு அபாயத்துக்கு உள்ளாகலாம் !!

விமான நிலையங்களுக்கு அனுப்பப்படும் கைவிரல் ரேகை பதிவுகள்!

நள்ளிரவு முதல் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு! அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானது!!

’பட்டலந்த ரணில் நிரூபிக்க தவறிவிட்டார்’

அவசரகால சட்டத்தை மேலும் நீடிப்பதன் மூலம் மக்களின் அடிப்படை உரிமைகள் குறைக்கப்படும்!!

பெத்தும் கேர்னர் கைது !!

இலங்கையில் கொந்தளிப்புக்கு மத்தியில் ராணுவம் கட்டுப்பாட்டுடன் செயல்படக்காரணம் என்ன? (படங்கள்)

அவசர காலச்சட்டம் நிறைவேறியது !!

கொழும்பில் மற்றுமொரு போராட்டம்! புகையிரத நிலையத்திற்கு முன்னால் திரண்ட போராட்டக்காரர்கள்!!

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களே உள்ளனர் – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!!

கோட்டாவுக்கு மேலும் 14 நாட்கள் அவகாசம் !!

போராட்டங்களுக்கு செவிசாய்க்க தயார்! ஆனால் பயங்கரவாதத்தை ஏற்க மாட்டோம்: பிரதமர்!!

விசா காலம் நீடிப்பு! கோட்டாபயவின் அடுத்த திட்டம் அம்பலம்!!

இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம்!! (படங்கள்)

கோத்தபய தப்பி ஓடவில்லை. . விரைவில் வந்துவிடுவார். . இலங்கை அமைச்சர் பேச்சு!! (படங்கள்)

விமானத்தில் வைத்து போராட்டக்காரர் கைது!! வீடியோ

காலி முகத்திடலில் பதற்றம் !!

கோட்டா விரைவில் திரும்புவார்: அரசாங்கம் !!

இலங்கைக்கு பொருளாதாரத் தடை விதிக்கப்படலாம் – சஜித்!!!

சீனாவுக்கு செல்கிறார் ஜனாதிபதி ரணில் !!!

பொருளாதார மீட்சிக்கு வலியுடன் கூடிய சிகிச்சை வேண்டும் – இந்திரஜித் !!

செப்டெம்பரில் இலங்கைக்கு புதியதொரு நெருக்கடி – பாக்கியசோதி!!

100 நாட்களுக்கு பின்.. மீண்டும் செயல்பட தொடங்கிய இலங்கை அதிபர் அலுவலகம்! இயல்புநிலை திரும்புமா? (படங்கள்)

இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)

கோட்டாவுக்கு எதிராக சிங்கப்பூரில் குற்றவியல் முறைப்பாடு !!

You might also like

Leave A Reply

Your email address will not be published.