கட்சித் தலைவர்களால் கோரிக்கை நிராகரிப்பு !!

பாராளுமன்றத்துக்குள் நுழைவதற்கு போராட்டக்காரர்கள் முற்பட்டால் அவர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பதிலடி நடத்துவதற்கு முப்படைத் தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் கட்சித் தலைவர்களிடம் அனுமதி கோரியதாகவும் அது நிராகரிக்கப்பட்டதாகவும் லக்ஷ்மன் கிரியல்ல எம்.பி தெரிவித்துள்ளார்.
முன்னதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த முப்படை தளபதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோர், ரணில் விக்கிரமசிங்கவை பதவி விலகுமாறு வலியுறுத்தியுள்ளனர் என்றும் கிரியெல்ல எம்.பி தெரிவித்தார்.