சபாநாயகர் இல்லத்திற்கு முன் பதற்றநிலை!

சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் சிலர் சபாநாயகர் இல்லத்திற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் அவர்களை கலைப்பதற்காக பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.