முக்கிய இடங்களை கையளிக்க தீர்மானம் – போராட்டக்காரர்கள்!!

காலி முகத்திடல் போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் என்பவற்றை உரிய தரப்பினரிடம் கையளிக்க காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அங்கு நடைபெற்று வரும் ஊடக சந்திப்பிலேயே இந்த விடயம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இனினும் இவ்வாறு தொடர்ந்தால் நாட்டின் நிலைமை மிகவும் பயங்கரமானதாக மாறிவிடும். எனவே தாங்கள் ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பிரதமர் அலுவலகத்திலிருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
இது ஒரு சமாதானமான போராட்டமாக காணப்பட வேண்டும். வன்முறை எங்கள் நோக்கமல்ல. எனினும் கோட்டாபய மற்றும் ரணிலை விரட்டும் வரை எங்கள் போராட்டம் முடிவுக்கு வராதென ஆர்ப்பாட்ட ஏற்பட்டாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.