சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 56)-சித்திறெஜினா..!

ஒரு உற்பத்திக் காலத்தில்.. கற்பத்தில் கனியாகி.. காலம் கனிந்த பின்.. மாதொரு மடியில் மகனாய் பிறந்து.. தவழ்ந்து புரண்டு தத்தி நடந்து .. மழலை மொழிந்து.. பின் எழுந்து நடந்து.. ஏடு படித்த‌ இளைஞனாகி.. கல்விக்குத் தக்க‌ கடமையும் புரிந்து.. வாலிப வயதில் மடந்தைகள் நோக்க‌… உள்ளம் புகுந்து உணர்வில் கலந்த உத்தமி ஒருத்தியின் கைத்தலம் பற்றி.. இல்லற வாழ்வின் இனிமையறிந்து.. பிள்ளைகள் பிறந்து நன்மைகள் புரிந்து.. உற்றம் சுற்றம் போற்றிட வாழ்ந்து.. முடிவில் ஒரு நாள் முதுமையடைந்து.. கண்கள் இருண்டு கடுகி நடந்து.. நோயில் விழுந்து பாயில் கிடந்து.. கடைசிக் காலம் கண்களில் தெரிந்து.. உற்றம் சுற்றம் சூழ்ந்து நிற்க‌.. உறவுகளெல்லாம் கண்ணீர் சிந்த.. உடலை விட்டு உயிரும் பிரிய‌.. ஒரு மாயக் கனவாய் மறைந்து போகிறது இந்த‌ மானிட‌ வாழ்க்கை …… ஒரு சராசரி மனிதன் தன் வாழ்க்கையை இப்படித்தான் வாழ்ந்து முடிக்க வேண்டும் என்ற படிமுறையை இயற்கை அவன் பிறந்த நேரம் முதலே எழுதி வைத்திருக்கிறது… பிறப்பு.. ஆம் அது அனைவருக்கும் ஒன்றாக இருந்தாலும்.. இறப்பு சிலருக்கு விபத்தினாலோ.. இடையில் ஏற்படும் தீராத நோயினாலோ அல்லது இயற்கை அனத்தங்களாலோ.. இப்படி ஏதோ ஒரு வகையிலோ இடையில் முடிந்து போவது விதி நடத்தும் ஒரு விளையாட்டுதான்.. இடையில் ஏற்படும் அப்படிப்பட்ட ஒரு துர் மரணத்தை அவன் தலை விதியாக‌ மனிதன் ஏற்றுக் கொண்டாலும் யாரோ ஒருவரால் அவன் திட்டமிட்டு கொலை செய்யப்படுவதை அவன் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவைகள் யாவுமே மனித நேயம் உள்ள மனிதர்களாலும் ஏற்றுக் கொள்ள‌ முடியாதவைகள் ..ஏனெனில் ஒரு மனிதன் எப்படிப்பட்ட தவறை செய்த போதிலும் அந்த‌ மனிதன் நீதியின் முன் தண்டிக்கப்பட வேண்டியவனே அல்லாமல் அவன் உயிரைப் பறிப்பதற்கு வேறு எந்த மனிதனுக்கும் உரிமையில்லை என்பதுதான் மனுநீதி.. ஆனால் இப்படியாக‌ ஏதோ ஒரு வகையில் அவன் வாழ்க்கை முடிந்து போனாலும் அவன் அறியாத அந்த வாழ்க்கையின் முடிவு வரைக்கும் அவன் நின்மதியாக.. மகிழ்ச்சியாக.. வாழ்வின் படிமுறைகளை அனுபவித்து வாழ்ந்து விட்டுப் போக வேண்டும் என்பதுதான் இயற்கை அவனுக்கு வகுத்து வைத்த‌ நியதி…. ஆனால் இயற்கையின் இந்த படிமுறைகளை விட்டு விலகி தனக்குத் தானே அவன் உருவாக்கிக் கொள்ளும் பேராசையும்.. வீண் பெருமையையும்.. தன்னலமும் எரிச்சலும்.. பொய்யும் புரட்டும்.. போட்டியும் பொறாமையும்.. பிறரை பழி வாங்கும் எண்ணமும்.. அவனை இயற்கை வகுத்த‌ யதார்த்த வழியிலிருந்து விலகச் செய்து.. ஒரு அழிவுப் பாதையை நோக்கி அவன் வாழ்க்கையை திருப்பி.. அவனைப் பாழடித்து.. அவனை ஒரு கொலைகாரனாக.. ஒரு கொள்ளைக்காரனாக.. ஒரு ஏமாற்றுப் பேர்வழியாக.. ஒரு சட்ட விரோதியாக.. சமூக விரோதியாக‌.. மாற்றியமைத்து விடுகிறது… மனித நாகரீகம் வழர்ச்சியடையத் தொடங்கிய‌ காலம் முதலே தான் பிறந்த இந்த மனித குலத்திற்கு இயற்கை வகுத்த இந்த‌ வழி முறைகளின்படி அவன் அமைதியை நேசித்து சமாதானமான மகிழ்ச்சியுடன் வாழ வைக்கப்பட‌ வேண்டும் என்பதில் அக்கறையுள்ளவர்களாக‌.. மனித வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும் நோக்கத்துடன் மேலும் பல வழிவகைகளை வகுத்து அவனுக்கு துணை புரிவதற்காக.. சமூகத்தில் உருவானவர்கள்தான் சமூகநலவாதிகள்.. மக்களின் சேவையை மகேசனின் சேவையாக கருதி தங்களால் இயன்றவரை மனித குலத்திற்கு நன்மை செய்யப் புறப்பட்ட இவர்கள் காலப் போக்கில் மனித குலத்தால் தலைவர்களாக மதிக்கப்பட்டு முடிவில் அவர்கள் அரசியல் வாதிகளாக மாற்றமடைந்தனர்… உண்மையான அரசியல்வாதிகள் என்பவர்கள் ஆராதிக்கப்பட வேண்டியவர்கள்.. ஆசீர்வதிக்கப்பட வேண்டியவர்கள்.. ஆம் அவர்கள்தான் ஒரு இனத்தை பாதுகாத்து அவர்களை வழி நடத்தும் தந்தையின் ஸ்தானத்தைப் பெற்றவர்கள்.. மனித‌ உயிர்களின் பாதுகாப்புக்கும்.. நின்மதியான வாழ்வுக்கும்..உத்தரவாதமளிப்பவர்கள். ஒரே நாட்டில் வாழும் தங்கள் இனத்திற்கும் மற்றைய இனங்களுக்கும் இடையில் ஒரு பாலமாக‌ இருந்து தன் இனத்தின் தேவைகளை பூர்த்தி செய்யும் வழிவகைகளை ஆராய்ந்து எந்த வழி தன் இனத்திற்கு மட்டுமல்லாமல் அங்கு வாழும் பிற இனங்களுக்கும் கெடுதல் விளைவிகாமல் அவர்கள் அனைவருமே சமாதானமாக வாழ‌ வழி வகுக்கும் என்று கருதுகிறார்களோ அந்த‌ வழியையே தெரிந்தெடுத்து அதன் மூலமே அந்த நாட்டு மக்களின் சுபீட்சத்திற்கு வழி காட்டும் கலங்கரை விளக்கங்களாக இருந்து தன் இனத்திற்காக பாடுபட‌ வேண்டியவர்கள் அவர்கள்.. தன்னுயிரைப் போல் தன் இனத்தை மட்டுமல்லாமல் அந்த நாட்டில் வாழும் பிற இனங்களையும் நேசிக்கும் மனித நேயம் இந்த அரசியல்வாதிகளுக்கு தாராளமாக இருக்க வேண்டும்.. அப்படியில்லாமல் தனது சுய தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்யும் சுயநலவாதிகளாக இவர்கள் செயல்பட்டு இனங்களுக்கிடையே முரண்பாடுகளை உருவாக்குவார்களேயானால் அந்த நாட்டிலே இரத்தக் களரி ஏற்பட்டு பல‌ படு கொலைகள் சர்வ சாதாரணமாக தினந்தோறும் அரங்கேறும் நிகழ்ச்சியாக அமைந்துவிடும் என்பதற்கு நமது இலங்கைத் தீவே மிகச் சிறந்த உதாரணமாகும்.. இலங்கை சுதந்திரமடைந்த‌ காலம் முதல் சிங்கள மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் வழி காட்டப் புறப்பட்ட இந்த சிங்கள தமிழ் அரசியல்வாதிகள் நடத்திய கொடூர‌ இனவெறி கக்கும் கேவலமான‌ அரசியலால் பல இலட்சக் கணக்கான இலங்கைத் தாய் ஈன்றெடுத்த செல்வங்களின் உயிர்கள் காவு போனது மட்டுமல்லாமல் அங்கே ஒரு கொலை வெறிக் கலாச்சாரத்தை வித்திட வழி கோலியது.. இன்று வரையில் இலங்கைத் தீவில் கொலைகளும் கொள்ளைகளும் சர்வ சாதாரணமாக நடை பெறுவதற்கு இந்த இனவெறிக் கலாச்சாரத்தையும் ஆயுதக் கலாச்சாரத்தையும் ஆரம்பித்து வைத்த‌ இந்த கேடு கெட்ட‌ அரசியல்வாதிகள்தான் முக்கிய‌ காரணம் என்றால் அது மிகையாகாது… இந்த கேடு கெட்ட‌அரசியலின் இறுதிக் கால கட்டத்தில் தமிழர்களின் வாழ்க்கையை முன் எப்போதுமில்லாதவாறு கேவலமாக சிதைத்தழிக்க புலிகள் உருவானார்கள்.. ஒரு புறம் புலிகள் துரோகிகள் என்று பட்டமளித்து தமிழர்கள் மத்தியிலிருந்த‌ கற்றோரையும் கண்ணியமானவர்களையும்.. முற்போக்குவாதிகளையும்.. சமாதான விரும்பிகளையும் போட்டுத் தள்ளவும்.. தமிழ் மக்களை வெருட்டவும் அடக்கி ஒடுக்கவும் தங்கள் ஆயுதங்களை வடக்கிலும் கிழக்கிலும் பயன்படுத்த‌.. இராணுவத்தில் இருந்து ஆயுதங்களுடன் தப்பியோடிய இராணுவத்தினர் பலரும் அந்த ஆயுதங்கள் மூலம் தென்னிலங்கையில் கொள்ளைச் செயலிலும் பணம் படைத்த சிங்களவர்களின் கைக் கூலிகளாக‌ இயங்கி அவர்கள் எதிராளிகளை போட்டுத் தள்ளும் பணிகளையும் செவ்வனே செய்து முடிப்பவர்களாக செயற்பட்டார்கள்.. இன்னும் செயற்படுகிறார்கள் .. தமிழ் சிங்கள இளைஞர்களான‌ இவர்களில் பெரும்பாலோர் பதினெட்டுக்குக்கும் இருபத்தைந்து வயதுக்கும் உட்பட்ட இளைஞர்கள்தான் என்பது வேதனைக்குரியது.. இன்று அனைத்து யுத்தங்களும் முடிவடைந்த நிலையிலும் ஆயுதம் படைத்த இந்த‌ இளைஞர்களின் அட்டகாசம் அடங்காமல் வடக்கிலும் தெற்கிலும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.. இவைகள் எல்லாவற்றிற்கும் மூல காரணம் எதிர் விளைவுகளைப் பற்றி சற்றேனும் சிந்தித்துப் பாராமல் விடாக் கண்டனும் கொடாக் கண்டனுமாக கடந்த காலத்தில் வாழ்ந்த அரசியல்வாதிகள் நடத்திய அரசியல் சூதாட்டம் இலங்கைத் தீவையை படு பாதாளத்தில் வீழ்த்த வழி கோலியது.. ஒரே வீட்டில் வாழ்ந்த இரண்டு சகோதர இனங்களுக்குள் பகையை மூட்டி விட்டு அதில் குளிர்காய்ந்தது இந்த தன்னலவாதிகள் கூட்டம்.. என்றோ சுமுகமாக தீர்த்து வைக்கப் பட்டிருக்க வேண்டிய இந்த இனப் பிரச்சனையானது இலங்கையின் முதல் பிரதமர் முதல் மகிந்தா ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் அரசாண்ட ஜனாதிபதிகள் வரை ஒரு தீர்த்து வைக்கப்பட முடியாத பிரச்சனையாக‌ இருந்ததற்கு காரணம் எந்த சிங்கள அரசியல்வாதியோ அல்லது தமிழ் அரசியல்வாதியோ இந்தப் பிரச்சனையை முறையாக‌ தீர்த்து வைக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறைய இருந்தும் அவைகள் யாவற்றையும் இயன்றவரை பின்தள்ளி தங்களால் முடிந்தவரையில் இனக்குரோத்தையே சிங்கள சமூகத்திலும் தமிழ் சமூகத்திலும் வழர்த்து வந்தார்கள்.. இந்த தமிழ் சிங்கள் அரசியல்வாதிகளின் செயல்பாடுகளுக்கும் தெருச் சண்டியர்களின் செயல்பாடுகளுக்கும் இடையில் அவ்வளவு பெரிதான வேறுபாடுகள் இருந்ததாகத் தெரியவில்லை.. இலங்கையில் ஒரு அரசியல்வாதி தன் இனத்தால் மதிக்கப்பட வேண்டுமானால் அவர் ஒரு தலை சிறந்த இனவாதியாகத்தான் இருக்க வேண்டும் என்று இந்த சிங்கள தமிழ் அரசியல்வாதிகள்.. அரசியல்வாதி என்ற வார்த்தைக்கு வரைவிலக்கணம் வகுத்திருந்தார்கள்.. குள்ள நரித் தந்திரவாதியான‌ ஜே.ஆரின் காலத்தில் இந்த இனவெறியின் உச்ச கட்டம் இலங்கையில் கொடி கட்டிப் பறந்தது..இனப் படு கொலைகள் தாராளமாக நிறைவேற்றப் பட்டன‌.. அவருக்குப் பின் வந்த ஆட்சியாளர்களின் காலத்தில் இந்த வெறி சற்றுத் தணிந்து இனக் கலவரங்கள் நிறுத்தப் பட்டாலும் தமிழர்களின் பிரச்சனையை துணிவுடன் அணுகி அதைத் நிரந்தரமாக‌ தீர்த்து வைத்து நாட்டில் நிலையான‌ சமாதானத்தை நிலைநாட்ட‌ அவர்கள் எவருமே பெரும்பாலும் சரியானபடி முயற்சிக்கவுமில்லை…அதைச் சரியான கோணத்தில் அணுகவுமில்லை.. காரணம்… பிரபாகரன் என்ற தமிழர்களை அடக்கியாள ஒரு அராஜகவாதி தமிழர்கள் மத்தியின் உருவாகி தமிழீழமென்னும் என்றுமே சாத்தியமாகாத‌ ஒரு கோட்பாடை உருவாக்கி அதை ஒரு வியாபாரமாக்கி அதற்கு அரசியல் முலாம் பூசி அவர் புரிந்த மனிதப் படு கொலைகள் மனித குலத்தையே அச்சுறுத்தி நடுநடுங்க வைத்ததால் அந்த தமிழ் சண்டியருடன் இந்த சிங்கள சண்டியர்கள் சற்று அடக்கித்தான் வாசிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது… வாசித்தார்கள்.. அடிக்கடி மோதுவது போல் பாசாங்கு செய்து கொண்டு அவருடன் இரகசிய ஒப்பந்தங்களை செய்து கொண்டு தங்கள் அடாவடி அரசியலை தொடர்ந்து நடத்துவதிலேயே அவர்கள் கண்ணும் கருத்துமாக இருந்தார்களேயன்றி பிரபாகரன் என்ற தேசியப் பயங்கரவாதிக்கு முற்றுப்புள்ளி வைத்து தமிழர்களுக்கான ஒரு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்தி இலங்கைத் தீவில் இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும் சமாதானத்தையும் நிலைநாட்ட‌ எவருமே முன் வரவில்லை.. மேலும் அவர்கள் தயக்கத்திற்கான இன்னொரு காரணம்.. பிரபாகரனின் உயிர் வாழ்தலிலேயே இந்தச் சிங்கள இனவாத‌ அரசியல்வாதிகளின் அரசியல் எதிர்காலமும் தங்கியிருந்தது என்பது இந்த இருபாலாரின் கடந்தகால நடவடிக்கைளையும் கூர்ந்து அவதானித்தவர்களுக்கு அது நிட்சயம் புரிந்திருக்கும்…தெளிவாகத் தெரிந்திருக்கும்.. பிரபாவின் வெற்றிகளை தமிழர்களின் வெற்றியாக சித்திக்கத் தெரியாத தமிழர்கள் கூட்டம் ஒன்று மந்தித்தனமாக‌ தமிழ்ப் பிரதேசங்களிலும் வெளி நாடுகளிலும் கொண்டாடி மகிழ‌.. இராணுவத்தின் வெற்றியை சிங்கள மக்களின் வெற்றியாக எண்ணிக் கொண்டாடி மகிழந்தது சிங்கள‌ மக்களின் மத்தியிலிருந்த‌ இன்னொரு புத்தியில்லாத மந்திகள் கூட்டம் ஒன்று.. ஆனால் இந்த இரு பாலாரின் வெற்றிக் களிப்பின் பின்னணியில் அழிந்து கொண்டிருந்ததோ வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்த‌ அந்த‌ பரிதாபத்திற்குரிய அப்பாவி சிங்கள தமிழ் மக்களின் பிள்ளைச் செல்வங்கள்தான்… இங்கே தமிழர்களின் ஏக பிரதிநிதியாக‌ தங்களைக் காட்டிக் கொண்ட புலிகளின் தலைவர் பிரபாகரன் எதைத்தான் தமிழ் மக்களுக்காக தன் காலத்தில் சாதித்திருந்தார்? புலிகள் எவரைக் கொல்கிறார்களோ அதுவே முறையானது என்ற கொள்கையின் அடிப்படையில்தானே அந்த விடுதலைப் போராட்டம் தொடர்ந்தது?.. அதில் எங்கிருந்தது தமிழர்களின் பங்கு?.. எங்கிருந்தது மக்களுக்குரிய‌ கருத்துச் சுதந்திரம்?.. தமிழ் மக்களை எந்த வேளையில் எப்போது இந்த ஆயுதங்கள் பாதுகாத்தன?.. சாதாரண ஒரு தமிழ் குடிமகனின் வீட்டு வாசலில் பதுங்கியிருந்து அந்த வழியால் போகும் இராணுவ வாகனத்தை நிலக்கண்ணி வைத்து தகர்த்து விட்டு அதில் சிதறிச் செத்தவர்கள் போக‌ சிதறிய வாகனத்திலிருந்து குற்றுயிரும் குலையுயிருமாய் வெளியே வரும் எஞ்சிய இராணுவச் சிப்பாய்களையும் சுட்டுக் கொன்று விட்டு ஓடியொழியும் இந்தப் போராளிகளின் தலை மறைவிற்குப் பின் ஸ்தலத்திற்கு விரைந்து வரும் இன்னொரு இராணுவப் பட்டாலியன் அந்த சுற்று வட்டாரத்திலுள்ள வீடுகளில் புகுந்து அங்கிருந்த வாலிப வயதுள்ள யாவரையும் கதறக் கதற வீட்டுக்கு வெளியே இழுத்து வந்து சுட்டுக் கொலை செய்தபோது எங்கே போனது புலிகள் குறிப்பிடும் அந்த‌ “தமிழர்களின் பாதுகாப்புக்காக‌ ஆயுதம் ஏந்தினோம்” என்னும் அந்த வார்த்தையின் அர்த்தம்.. அது எப்படிப் பாதுகாத்தது தமிழர்களின் உயிர்களை?.. இப்படித்தானே புலிகள் தமிழர்களுக்கு பாதுகாப்பு வழங்கினார்கள்.. இந்தப் பாதுகாப்பானது அத்துடன் நின்று விடாமல் அவர்களின் இறுதி மூச்சுவரை தொடர்ந்ததே!.. ஆம் முள்ளி வாய்க்காலில் தமிழர்களை மனிதக் கேடயங்களாக்கி அவர்களில் பெரும்பாலோரை அழித்தொழித்து விட்டுதானே அடங்கியது அந்தப் பாதுகாவலர்களின் இறுதி மூச்சுக‌ள்… பஞ்ச தந்திரத்துடன் இவர்கள் நடத்திய அரை வேக்காடு அரசியலால் இலங்கைத் தீவில் கண்டு களிப்பதற்கு எதுவுமில்லாமல் பல தசாப்தங்களை கண்டு களைத்த நிலையில் மகிந்தாவின் சகாப்தம் ஆரம்பமானது.. இவர் ஜனாதிபதியாக‌ முடி சூட்டிக் கொள்வதற்கு வியாபார நோக்கமுள்ள பிரபாகரனாதியோர் முக்கிய காரணமாக இருந்தார்கள் என்பது ஒருபுறம் இருக்க.. அப்படி அவர் பதவியேற்றதும் தனது முதல் நடவடிக்கையாக புலிகளை பேச்சு வார்த்தைக்கு அழைத்தார் அவர்.. அதை முந்தைய ஜனாதிபதிகள் போல் அல்லாமல் உண்மையிலேயே இலங்கையில் தமிழர்களுக்கு ஒரு தீர்வைக் கொடுத்து அவர்கள் நன்மதிப்பை தான் பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவும்.. நாட்டிலுள்ள‌ இனங்களுக்கிடையில் உண்மையான ஒரு நிரந்தர சமாதானம் ஏற்பட்டு கடந்த காலங்களின் நடைபெற்ற‌ போரினால் அழிந்து சிதைந்து போயிருந்த இலங்கையின் பொருளாதாராமும் அதன் கட்டுமானப் பணிகளும முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் அக்கறை உள்ள ஒரு தேசியவாதியாகவும் இதை அவர் முன்னெடுத்தார்.. ஆனால் நடை பெற்ற‌ பேச்சு வார்த்தைளிலோ .. இராணுவத்தை அகற்று.. தமிழ் பகுதிகளில் புதிதாக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படுவதை நிறுத்து.. போன்ற நடைமுறைக்கு சாத்தியமில்லாத பல‌ கோரிக்கைகளை முன்வைத்து அந்தப் பேச்சு வார்த்தைகளை குழப்பியடிப்பதில் பிரபாகரனாதியோர் முன்னின்றார்களேயன்றி.. தமிழர்களுக்கான எந்த ஒரு சாத்தியமான‌ தீர்வையும் அவர்கள் முன் வைக்கவுமில்லை.. மூச்சு விடவுமில்லை. (மகிந்தாவின் காலத்தில் இராணுவமும் பொலிசாரும் தமிழர்கள் மத்தியில் புலிகள் நடத்தி வந்த‌ அடக்கு முறைக்கும்.. அட்டகாசமான‌ வசூலிப்புகளுக்கும்.. வேண்டிய இடத்தில் வேண்டாதவர்களை போட்டுத் தள்ளும் நற் பணிகளுக்கும் பெருந் தடையாக இருந்தார்கள் என்பது வேறு விசயம்..) பேச்சு வார்த்தைகள் முறிவடைந்த நிலையில் மகிந்தாவை தப்புக் கணக்குப் போட்ட புலிகள் மீண்டும் யுத்தம்.. போர் நிறுத்தம் என்று பழைய பாணியில் தங்கள் போக்கை ஆரம்பிக்க அதற்கு புலி ஊடகங்கள் ஒத்தூத அவர்கள் வியாபாரம் ஜோராக ஓகோ என்று வெற்றி நடை போடத் தொடங்கியது.. புலிகளின் செயற்பாடுகளால் போர் பிரியர்களாக மூளைச் சலவை செய்யப்பட்ட புலம் பெயர்ந்தவர்கள் புலிப் பினாமிகளுக்கு வாரிக் கொடுக்கும் பாரி வள்ளல்களானார்கள்.. அதர்மம் என்றுமே நிலை நிற்பதில்லை.. அக்கிரமம் நிக்கிரகம் செய்யப்படும் நாளும் வந்தது.. அது மாவிலாறு வடிவில் வந்தது.. மாவிலாற்றைப் பூட்டி தங்கள் அழிவுக்கு பாதையை திறந்து விட்ட‌ புலிகளை நோக்கி முன்னேறிய‌ மகிந்தாவின் இராணுவம் புலிகள் நினைத்து போல் போர் நிறுத்தம் என்றதும் அது இடை நிறுத்தப் படவில்லை.. போர் நிறுத்தம் என்பது தங்கள் படை பலத்தையும் ஆயுத ஆயுத பலத்தையும் அதிகரிக்க புலிகள் போடும் போலி வேசம் என்பதை நன்றாகவே புரிந்து வைத்திருந்த மகிந்தா அதை நிறுத்த மறுத்தார்.. தொடர்ந்தார்.. பிரபாகரனாதியோருக்கு நிரந்தரமாக‌ முள்ளி வாய்க்காலில் முற்றுப் புள்ளி வைக்கும்வரை.. தமிழ் மக்கள் தாராளமாக‌ கொல்லப்பட வேண்டும் அதனால் சர்வதேசம் இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று நன்றாகவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட புலிகளின் இறுதி யுத்தத்தை சர்வதேசம் கண்டு கொள்ளவில்லை.. காரணம்.. புலிகளுக்கு சார்பாக செயல்பட்ட நோர்வே கூட அந்தப் போரின் இறுதிக் கட்டத்தில் புலிகள் கட்டுப்பாடுப் பகுதியிலுள்ள வன்னிச் சனங்களை அவர்களுக்காக அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட பாதுகாப்புப் பிரதேசத்தில் போக அனுமதிக்கும்படி பலமுறை வேண்டுகோள் விடுத்தும் புலிகள் அதை அலட்சியம் செய்ததால் சர்வதேசம் வெறுப்படைந்து அந்த இறுதிக் கட்டத்தில் மௌனம் சாதித்தது.. அன்று புலிகள் அவர்கள் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அப்படி அந்த அப்பாவிச் சனங்களை இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் போக அனுமதித்திருந்தால் அந்த இறுதிக் கட்டத்தில் புலிகளுக்கு உதவி செய்ய சர்வதேசத்தில் ஏதாவது ஒரு நாடாவது முயற்சித்திருக்கும்.. புலிகள் யாவரும் முற்றாக அழித்தொழிக்கப்பட்ட பின்னர் சரணடைந்த புலிப் போராளிகளுக்கு புனர்வாழ்வழிப்பதில் அக்கறை காட்டியது மகிந்த அரசு.. அவர்களில் தொழில் பயிற்சியளிக்கப்பட்ட பலர் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் தொழில் வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.. அவர்களில் பலருக்கு திருமணங்கள்கூட அரசாங்க செலவில் நடத்தி வைக்கப்பட்டுள்ளது.. அகதிகள் முகாம்களில் உள்ளவர்களில் 90 வீதமானவர்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளார்கள்.. இவர்கள் அனைவரையும் குடியேற்றுவதில் சில குறைபாடுகள் இருந்த போதிலும் அவைகளை இயன்றவரை நிவர்த்தி செய்து தீர்த்து வைப்பதில் மகிந்தாவின் அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.. வடக்கிலும் கிழக்கிலும் உள்ள எந்த தமிழ் மகனும் இராணுவத்தால் துன்புறுத்தப்பட்டதாகவோ அல்லது கொலை செய்யப்பட்டதாகவோ தகவல்கள் எதுவும் இல்லை.. பிரபாகரனாதியோரின் அழிவிற்குப் பின்னர்தான் அவர்கள் காலத்தில் பிறந்த இளைய சமுதாயமொன்று மனித சுதந்திரம் என்றால் என்ன என்பதை இன்று வடக்கிலும் கிழக்கிலும் அறியத் தொடங்கியிருக்கிறார்கள்.. இன்று சிங்கள சமூகம் எவ்வளவோ முன்னேறி வருகிறது.. இனத்துவேசத்தை ஒதுக்கி யதார்தமாக சிந்திக்கத் தொடங்கியுள்ளது.. அதற்கு காரணம் மகிந்தாவின் முயற்சிதான் என்றால் அது மிகையாகாது.. தேர்தல் பிரச்சாரத்திற்காக மட்டும் அவர் தமிழில் பேசாமல் தமிழ் மொழியை சிங்கள மக்கள் அனைவரும் கற்க வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் என்பதற்கு அண்மையில் நடந்த நிகழ்ச்சியொன்றே எடுத்துக் காட்டாகும்..”வாழ்க தமிழ் மொழி! வாழ்க தமிழ் மொழி! வாழிய வாழியவே!” என்று தமிழ் மொழியை நன்றாகக் கற்றுத் தேர்ந்த பௌத்த பிக்குகள் உட்பட‌ சிங்கள அரசாங்க ஊழியர்கள் பலர் அண்மையில் ஒன்றாகக் கைகோர்த்தபடி அந்த‌ மேடையில் உருக்கமாக பாடியிருப்பதை கேட்கும்போது சற்று மெய் சிலிர்க்கத்தான் செய்கிறது…. அவர்கள் அனைவரும் தமிழ் மொழியில் சித்தியெய்தியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்ட அன்று தான் இப்படிப் பாடி அசத்தியுள்ளார்கள். இந்த தமிழ் மொழிக்கான பயற்சியை முதலில் தனது சொந்த‌ தொகுதியான அம்பாந்தோட்டையிலேயே மகிந்தா ஆரம்பித்து வைத்து சிங்கள மக்கள் தமிழ் கற்க வேண்டும் என்பதில் தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார் அவர்.. சிங்கள மக்கள் மத்தியில் இன்று இனவெறி காணாமல் போய்க் கொண்டிருக்கும் இதே கால கட்டத்தில் புலி வழிவந்த சில புத்திசாலிப் பிரமுகர்கள் தங்கள் பிழைப்புக்காக இன்னும் இனவெறியையே தங்கள் ஆயுதமாக ஏந்தி தமிழ் மக்களுக்காக போராடப் புறப்பட்டிருக்கிறார்கள்.. இவர்களின் பித்தலாட்டங்களை தற்போது சற்றளவேனும் புரிந்து கொள்ளக் கூடிய அளவு புத்தி தெளிந்திருக்கும் புலம் பெயர் தமிழர்கள் அவர்களை அலட்சியம் செய்யவும்..நிராகரிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள் என்பதை அவர்கள் செயற்பாடுகளில் இருந்து தெரியக் கூடியதாக இருக்கிறது.. தாம்தூம் என்று பெரிய எடுப்புடன் ஆரம்பிக்கப்பட்ட “நாடு கடந்த தமிழீழமும்”.. “வட்டுக்கோட்டைத் தீர்மானமும்” இன்று எங்கோ காணாமல் போய் பெட்டிக்குள் முடங்கிக் கொண்டன‌.. ஒரு உண்மையான அரசியல்வாதி என்பவன் தன் மக்களுடன் கூட‌ இருந்து அவர்கள் துன்பங்களில் பங்கு கொண்டு அவர்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொடுப்பானேயன்றி தான் மட்டும் வசதியாக‌ பிறிதொரு நாட்டில் வாழ்ந்து கொண்டு தனது மக்களின் அழிவுக்கு பாதை வகுத்துக் கொடுக்க மாட்டான்.. மகாத்மா காந்தி தென்னாபிரிக்க இந்தியர்களின் உரிமைக்காக போராடியபோது அவர் தென்னாபிரிகாவிலும்.. இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடியபோது அவர் இந்தியாவிலும்தான் இருந்தார்.. தென்னாபிரிக்காவில் இருந்து கொண்டு இந்திய சுதந்திரத்திற்காகவும் இந்தியாவில் இருந்து கொண்டு தென்னாபிரிக்காவில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைகளுக்காவும் அவர் போராடியிருந்தால் அவைகள் அனைத்துமே தோல்வியில்தான் முடிந்திருக்கும்… ஆகவே உண்மையிலேயே இவர்கள் துணிவுள்ள‌ போராட்ட வீரர்களாக இருந்தால் தாங்கள் தற்போது வாழும் நாட்டின் பிரஜா உரிமையை இரத்துச் செய்து விட்டு இலங்கைக்கு திரும்பிச் சென்று அங்கிருக்கும் தமிழர்களுடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டு அவர்கள் குறிப்பிடும் நோக்கங்களுக்காக‌ போராடிப் பார்க்கட்டும்… புலம் பெயர்ந்த மக்களை பேய்க்காட்டி உங்கள் பணப்பைகளை நிரப்புவதற்காக‌ இலங்கைத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்காதீர்கள்.. அவர்கள் சுபீட்சத்தில் அக்கறையுள்ளவர்களா நடித்து இலங்கைத் தமிழர்களின் எதிர்காலத்தை சிதைத்து சீரளித்து விடாதீர்கள்.. அவர்களை நின்மதியாக வாழ விடுங்கள்.. மீண்டும் ஒரு முறை புலிகளின் வழிகளில் சென்று இனவெறிக் கொள்கையை கையில் எடுத்தால் நமது தமிழினம் என்பது சர்வ தேசத்தாலும் வெறுக்கப்பட்டு ஒதுக்கப்பட்டு எங்கோ ஒரு பனிமூட்டம் சூழ்ந்த‌ பாலைவனத்தில் தட்டந்தனியான கேட்பாரற்ற ஒரு பட்டமரமாகத்தான் அது காட்சியளிக்கும் என்பது சர்வ நிட்சயம்.. அன்று போராட்டம் என்று ஆயுதம் ஏந்திய அமைப்புகளுக்கு தலைமை தாங்கியவர்கள் பலர் இன்று அவைகள் அனைத்துமே அர்த்தமற்றவைகள் என்பதை உணர்ந்து நேசக் கரம் நீட்டும் மகிந்தாவின் அரசுடன் இணைந்து தமிழினம் மகிழ்ச்சியாகவும் சுபீட்சத்துடன் சுய கௌரவத்துடனும் வாழ வேண்டும் என்ற வேட்கையுடன் தங்களால் இயன்றவரை தொண்டாற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.. அவைகள் காலப் போக்கில் நிட்சயம் மேலும் வெற்றியளிக்கும்.. சமாதானப் பாதையில் முன்னெடுக்கப்படும் எந்தக் காரியமும் தோல்வியில் முடிவடைவதில்லை.. ஆனால் ஆயுதப் போராட்டம் என்ற ஒன்றை ஆரம்பித்து சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டு இராணுவத்துடன் மோதி சகோதர போரட்ட இயக்கங்களையும் அழித்து.. இறுதியில் மக்களையும் அழித்து.. தாங்களும் தோற்றுப் போய் சரணடைந்தோ அல்லது அழிந்துபோன இயக்கங்களின் வரலாற்றில் புலிகள் வரலாறு மட்டுமல்லாது .. காஷ்மீர்.. பங்களாஷ்.. இந்தோனேசியா.. கிழக்காபிரிக்கா.. இலத்தினமரிக்கா போன்ற நாடுகளில் நடந்த போராட்ட வரலாறுகளும் இதற்கு சான்று பகிர்கின்றன. ஆகவே இந்த ஆயுதப் போராட்டம் என்பது அர்த்தமற்றது என்பதை எமது தமிழினம் இனியாவது நன்கு உணர்ந்து கொண்டு வேண்டாத இந்த இனவெறி அரசியலை வெறுத்து சமாதானப் பாதையொன்றுக்கு தங்கள் மனதைத் திருப்ப வேண்டும்.. அது ஒன்றுதான் தமிழர்களுக்கான சுபீட்சமான வாழ்க்கையை நோக்கி வழி நடத்தும் சிறந்த பாதையாகும்…. (தொடரும்) அன்புடன் சித்திறெஜினா  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 56)-சித்திறெஜினா..!

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்3

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்3 ஏற்கனவே இரு பாகங்களை வாசித்த பலர் அடுத்த பாகத்தின் எதிர்பார்ப்பிலும், இதன் போக்கு எத்தகைய உண்மை பொதிந்துள்ளது என இன்னொரு சாராரும், வழமைபோல் இவருடைய ஆக்கத்தில் வெளிவருகின்ற முற்போக்கு கருத்துக்கள் இதில் வெளிவருமா என்று சில அரசியல் நகர்வாளர்களும், விவாதத்திற்கே என்று இன்னொரு  சிலரும் …, சஞ்சரிக்கத்தான் போகின்றனர்… இது ஒருபுறம் இருக்க, பேரறிஞர் ஐயா சிவத்தம்பியைப்பற்றி ஒரு சம்பவத்தை பதித்தாகவே ண்டும் … காரணம் “கடந்த வரலாற்று உண்மைகளை,  இன்றைய அநர்த்தத்தோடு ஒப்பிடும்போதே, எதிர்கால பாதைகளிற்கான கடினமான கற்கள் விலக்கப்படுகின்றன…”  இதனடிப்படையில் கடந்த 2009ம் ஆண்டில் ஐயா மதிப்பிற்குரிய சிவத்தம்பி அவர்கள் “தமிழ்நாடு கோவையில் நடைபெற உள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் ஆய்வரங்க குழுத்தலைவராக பேராசிரியர் கா.சிவத்தம்பியும்இ தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் கனிமொழியும் நியமிக்கப்பட்டுள்ளனர். கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. ஆனால், மாநாட்டில் பங்கேற்பதா இல்லையா என்பதை தாம் இன்னமும் இறுதியாக முடிவெடுக்கவில்லை என்று இலங்கை தமிழறிஞர் கா.சிவத்தம்பி அவர்கள் அண்மையில் பி.பி.ஸி. தமிழோசைக்கு தெரிவித்தார்.” என பல இணையங்கள் காரசாரமாக வெளியிட்டிருந்தன… இதற்கும் இலங்கை வரலாற்றிற்கும் என்ன சம்மந்தம் என்று ஒரு சிலர் வினாவத்தான் செய்வார்கள்!!!… “எப்போதும் பலம்பொருந்தியவர்களின் செயற்பாடுகள் சர்வதேச சிறப்பைப்பெறும், மாறாக பலங்குன்றியவர்கள் சிறப்பான செயற்பாடுகளை மேற்கொண்டாலும் அது விமர்சனத்தோடே ஸ்தம்பித்துவிடுகின்றன…” என எழுகின்ற கருத்தின் அடிப்படையில் பேரறிஞரான ஐயாஅவர்கள் திடமாக வார்த்தைகளையும் அடிகளையும் எடுத்துவைக்காது, பலவீனமான கருத்தைத்தெரிவித்து விட்டு இப்போது 2010ல் அந்த விழாவில் கலந்து சிறப்பித்து வந்திருக்கின்றார்… நல்ல செயற்பாடு, இதையே அவர் ஆரம்பத்தில் திடமாகச்சொல்லியிருந்தால் அனைத்து தமிழ் ஊடகங்களும் தமிழ் அறிஞர்களும் அதுதொடர்பாக பேசியிருப்பார்கள், அந்த மாநாட்டில் பல தமிழர்கள் கலந்தும் இருப்பார்கள்…  தமிழ் உலகம் முழுதும் சிறப்பிக்கப்பட்டிருக்கும்… இவ்வாறான செயற்பாடுகளே வரலாற்றை மழுங்கடித்து முன்னுக்குப்பின்னான முரன்பாடுகளை எதிர்காலச்சந்ததிக்குத்து தோற்றுவிக்கின்றது. முன்னிக்கவேண்டும் ஐயா அவர்களே! தவறுகள் பகிரங்கமாக்கப்பட வேண்டும் அப்போதுதான் அவை திருத்தப்படும்!!! இனி… அடுத்து பகுதிக்குச் செல்வோம். முதலாவது பகுதியிலும், இரண்டாவது பகுதியிலும் தமிழர்களின் ஆரம்ப அடிகளைப்பார்த்து, பல விடயங்களை அறிந்திருப்பீர்கள். எனினும் இரண்டாவது பகுதி சற்றுக்கடினமாகத்தான் இருந்திருக்கும் என்பதனை அன்பர்கள் எனக்கு எழுதிய விமர்சனங்கள் தெளிவுபடுத்துகின்றது. எனவே மேலும் இலகுபடுத்துப்பட்ட தமிழிலும், நடைமுறை வரிகளாலும் அலங்கரிக்கப்பட்டே இம்மூன்றாவது பகுதி வெளிவருகின்றது. இரண்டாவது பகுதியில் முன்னைய அரசர்கள் பற்றி அலசியிருந்தோம். அது ஒரு புறம் இருக்க,  இலங்கை அரக்கர் வாழும் ஒரு பிரதேசமாக புராணங்கள் விளக்கம் கொடுக்கின்றன… இது எத்தனை தூரம் உண்மை என்பதனை சற்று நோக்கித்தான் பார்க்க வேண்டும். இன்றைய தமிழ் வரலாற்றை கண்ணோக்குமிடத்து, தமிழீழம் என்றொரு தேசத்தில் மாவெரும் படையை நடாத்திய கரிகாளச்சோளனுக்கு ஒப்பான ஒரு மாவீரன் பிரபாகரன் என்ற நாமத்துடன் சிறப்பாகச் செங்கோலாட்சி நடத்திய வரலாறுகள் காட்டத்தவறவில்லை, அந்தத் தமிழீஈழ அரசனையும் அவன் படைகளையும், சிங்களக்காடையர்கள் பெரும் மனிதாபிமானமற்ற அரக்கத்தனமாக தோற்கடித்து பெருந்தொகையான தமிழ் குடிகளை கொண்று குவித்தனர்… என்று வரலாற்றில் வருகின்ற போது, … இங்கு சற்று நிறுத்திக்கொள்ளுதல் அவசியம்!!! அதாவது, “சிங்களக்காடையர்”, “அரக்கத்தனமாக” என்ற இந்தப்பதங்கள் சிங்களவர்களுக்கு மாறாக தமிழர்களாலே குறிப்பாக புலிகளைச்சார்ந்த அல்லது நலன்விரும்பிகளான தமிழர்களால் சித்தரிக்கப்படுகின்ற போது, சிங்களவர்கள் வேறுவகையில் இதனை வர்ணிக்கப்போகின்றார்கள் என்ற உண்மையினைப்புரிந்து கொள்ள வேண்டும். இந்த வகையில் மேல் குறிப்பிட்ட வார்த்தைகள் அதாவது, “சிங்களக்காடையர்”, “அரக்கத்தனமாக”  என்னும் பதத்தை விசாலமாகப்பாத்தால், காடையர்கள் மனிதர்களாக இருந்தாலும் மிருகத்தனமாகச் செயற்படுவோர்கள் எனவும், அரக்கர்கள் மனித உறுவில் மிருகங்களாகவும், மனித மாமிசம் தின்பவர்களாகவும், மனிதர்களிலும் பார்க்க பலம்கொண்டவர்களாகவும், மாயை மந்திரங்களை கையாளத்தெரிந்தவர்களாகவும் பார்ப்பதற்கு அசுரத்தன்மை கொண்டவர்களாகவும் இருப்பார்கள் என்றே நம் கதைகள் விளக்குகின்றன… இந்தவகையில் சிங்களவர்களைப்பார்க்கும் வரையில் அது கூட உண்மையாகத்தான் இருக்கின்றது. ஆனால் சிங்களவர்களைப்பார்த்தபின்னர்தான் தெரிகின்றது பல சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் பார்வையில் வேறு பாடே இல்லை என்று! இதுபோலவே வரலாறறுப்பக்கங்களிலும் பல உண்மைகள் நமக்குத் தெரியாமலே புனையப்பட்டுள்ளன. ஊண்மைகள் உண்மைக்குப்புறம்பாக வெளிப்படுத்தப்பட்டன. அதுவாகில், ஆரிய இனத்திற்கும் திராவிட இனத்திற்கும் அன்றைய ஆரம்ப காலத்தில் இருந்தே ஒவ்வாத்தன்மை காணப்படுகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. தமிழர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள்… சிங்களவர்களோ, ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள். நான் சிங்களவர்கள் என்று குறிப்பிடுவது, விஜயனின் காலத்தில் இருந்து வெளிவந்தவர்களைக்குறிக்கின்றது… “குவேனியை” சார்ந்து தடமாறியகாலத்தில் இருந்தே புதிய தனி இனமாக சிங்களவர்கள் தம்மை வகுத்துக்கொண்டனர் என்பதனை பின்வரும் பகுதிகள் தெளிவு படுத்தும். இப்போது இரண்டாவது பகுதியில் குறிப்பிட்ட பல அரசர்களைப்பார்க்கும் முன்னர் பிரபல்யமாக காணப்பட்ட இலங்காபுரியின் மாமன்னனான இரவணனின் வரலாற்றை சற்றுப்பார்ப்போம். இராவணனின் வரலாறு என்றவுடனேயே எமக்கு கண்முன்தோன்றுவது இராமாயணமே! இந்த ராமாயணம் யாருடைய பக்கத்தில் இருந்து எழுதப்பட்டது என்றும் பார்ப்பது மிக அவசியமாகக்காணப்படுகின்றது. அதாவது, இப்படி உதாரணப்படுத்துவோம், இராவணன் – பிரபாகரன் இராமன் – இராஜபக்ஷ இராவணன் என்றதும் கொடியவன், அரக்கன் என்ற எண்ணம் தமிழர்களான எம்மவர்களிடமும் இருப்பதுதான் ஆச்சரியம்!. பின்வரும் ஆதாரங்கள் இராவணனின் உயர்தரக்குணங்கள் தெளிவாக வெளிக்காட்டப்படும். அதே போன்றே பிரபாகரனின் உயர்தரக்குணத்தை அவருடன் கூடியிருந்தோரும், அவர் நம்பியிருந்தோரும் தற்போது தமது நன்மைக்காக கேவலப்படுதஇது முயற்சிப்பதிலிருந்து புலிகளின் பல சிறப்பம்சம் காலப்போக்கில் மறைக்கப்படப்போகின்றது என்பதும் உண்மையே!  Read More »

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்3

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 55)-சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 55)-சித்திறெஜினா..! “மாய்மாலக்கார மருமகளே! கோழிக்கறிக்கு பதம்பார்” என்றாளாம் ஒரு மாமியார் அதற்கு அவள் மருமகள் “ஐயோ அது கொக்கோ என்று கொத்த வருகுது அத்தே நான் மாட்டேன்” என்றாளாம்… இப்படிப்பட்ட ஒரு மாய்மாலக்கார மருமகளாகத்தான் இருக்கிறார்கள் சில‌ வெளிநாட்டுப் புலிப் பினாமிகள் இன்றும்… கடந்த வருடத்தில் இலங்கைத் தமிழர்களை மட்டுமல்ல ஒட்டு மொத்த இலங்கை மக்களையே ஆட்டிப் படைத்த பிரபாகரனாதியோரும் அவர்கள் படை பலமும் முற்றாக அழிக்கப்பட்டு… பயங்கரவாதம் ஒடுக்கப்பட்டு.. ஒழிக்கப்பட்டு.. இலங்கையில் அமைதி பிறந்து அனைவரையும் நின்மதிப் பெருமூச்சுவிட வைத்த மகிந்த அரசு இனிமேல் இந்த நாட்டிலே இனவாதம் என்ற பேச்சுக்கே இடமளிப்பதில்லை என்றும் அனைவரும் இந்நாட்டு மக்களே என்றும் உறுதிமொழி கொடுத்து படிப்படியாக மீள் குடியேற்றத்தை ஆரம்பித்தபோது வன்னியில் கடந்த காலத்தில் புலிகளால் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளால் அந்தப் பணியில் சற்றுத் தாமதம் ஏற்பட்டு அவர்களை குடியமர்த்துவதில் சில தடங்கல்களும் குறைபாடுகளும் ஏற்பட்ட‌ போதிலும் பல நடைமுறைச் சிக்கல்களுக்கு மத்தியில் இயன்றவரை அவர்களை குடியமர்த்தி தற்போது ஒரு சிலரே அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையாகும்…மேலும் அனைத்திலங்கை மக்களின் வளமான‌ எதிர்காலம் ஒன்றுக்காக‌ நாட்டைக் கட்டியெழுப்பும் பணியில் அனைவரையும் ஒன்றிணைத்து வடக்கு கிழக்கு தெற்கு என்று பாரபட்சம் பாரமாமல் நாட்டின் பல பாகங்களிலும் கட்டுமானப் பணிகளை துரிதகதியில் இயங்கச் செய்வ‌துடன் நின்று விடாது தமிழர்கள் தன் காலத்திலேயே அவர்கள் சுய உரிமைகள் அனைத்தையும் பெற்று சுதந்திரமாக.. சுந்தரமாக… சுய கௌரவத்துடன் வாழ வைக்கப்பட்டார்கள் என்ற நற்பெயர் தனக்கு ஏற்பட வேண்டும் என்பதில் ஆர்வமுள்ள ஒருவராக அனைத்து தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களையும் ஒன்றிணைத்து அதற்கு ஒரு முடிவு காண்பதற்காக‌ அவர் அயராது செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும்… கடந்த காலத்தில் சமாதானமாக தமிழர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கப்படக் கூடிய சாத்தியக் கூறுகள் நிறைய‌ இருந்தும் தங்கள் சுயநல நோக்கத்திற்காக அவைகள் அனைத்தையுமே வேண்டுமென்றே மறுதலித்துப் புறந்தள்ளி போர்..போர் என்று தமிழினத்தின் வருங்காலச் சந்ததியொன்றை அதற்காக பலி கொடுத்து… இளைய சமுதாயமொன்றின் எதிர்காலத்தை நிர்மூலமாக்கி… தமிழர்களின் எதிர்காலத்தை சிதைத்து… அவர்கள் சுபீட்சத்திற்கு இடறலாக‌ இருந்த புலிகள் என்னும் தடைக்கல் நீக்கப்பட்ட நிலையிலும் இன்னும் குழம்புக் வைத்த கோழிக்கறி கொக்கோ என்று கொத்த வருவதுபோல்தான் என்றோ நடந்த இனக்கல‌ரவங்களை இன்னும் தொகுத்து பெருதுபடுத்தி அவைகள் இன்றுதான் நடைபெறுவது போன்ற ஒரு தோற்றப்பாட்டை வெளி நாட்டுத் தமிழர்கள் மத்தியில் உருவாக்கி அதனால் இன வெறியைத் தூண்டி கடந்த காலத்தில் தங்கள் பணப் பைகளை நிரப்பிக் கொண்டதுபோல் இனியும் நிரப்பலாம் என்று கனவு கண்ட புலிப் பினாமிகளை விட்டு மெல்ல மெல்ல ஒதுங்கத் தொடங்கியுள்ளது புலம் பெயர்ந்த கூட்டம்….. பிரபாகரன் காலத்தில் இவர்களுடைய‌ இந்த‌ மாய்மாலங்கள் வெற்றியளித்து வந்திருந்தாலும் தற்போது தங்கள் சிந்தையில் ஓரளவு தெளிவடைந்து யதார்த்தத்தைப் பற்றி சிந்திக்ககவும் புரிந்து கொள்ளவும் தொடங்கியுள்ள‌ புலம் பெயர்ந்த புலி ஆதரவாளர் கூட்டத்தினர் பலரின் அறிவுக் கண்கள் திறந்து புலிகளை அலட்சியம் பண்ணத் தொடங்கியிருப்பது இலங்கையில் வாழும் தமிழர்களுக்கான விமோசனம் வெகு தூரத்தில் இல்லை என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது … கனடாவில் மட்டும் பிரபாகரனின் பிள்ளைகளின் பெயரில் பல கோடிக் கணக்கான சொத்துக்கள் திரை அரங்குக்களாகவும் பிஸியான பிஸ்னஸ் சென்ரர்களாகவும் பல புலிப் பினாமிகளின் கட்டுப்பாட்டில் இன்று வரை இயங்கி மாதம் சுமார் 200 கோடி வரையில் இலாபம் ஈட்டி வருவதாக இலங்கை புலனாய்வுப் பிரிவினர் கண்டு பிடித்திருப்பதாக புலிகளின் ஆதரவு இணையத் தளங்களே பெருமையாக‌ செய்தி வெளியிடும்போது தமிழினத்தின் இயமனாக வந்து வாய்த்த‌ பிரபாகரனை இமயம்வரை உயர்த்தி தமிழர்களின் விமோசனத்திற்காக‌ எதையோ தியாகம் செய்த பெருந்தகையாக‌ சிந்தரித்து அவர் புகழ்பாடிச் சதிராடும் சில‌ புலி வால்கள் இன்னும் மடங்குதாகத் தெரியவில்லை .. எனினும் மனம் திருந்திய‌ அவர்களில் பலர் தங்கள் கருத்துக்களை யதார்த்தத்தை நோக்கி மாற்றிக் கொண்டு வருகிறார்கள் என்பது தற்போதய பல நிகழ்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடிகிறது… புலிகளின் காலங்களில் அவர்கள் தங்கள் பிழைப்புக்காக‌ மகிந்தாவை ஒரு பேரினவாதியாக இனத்துவேசம் கொண்ட ஒரு இனவெறியராக தங்கள் இணையத் தளங்களில் சித்தரித்து வந்ததை அந்த நாட்களில் புலிகள் சார்பு இணையத் தளங்களை மட்டுமே மேய்ந்து வந்த நமது புலம் பெயர்ந்த தமிழர்கள் அப்படியே நம்பி வந்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை…மகிந்தா என்பவர் யார் என்பது புலிகள் சொல்வதுதான் உண்மையென்று அவர்கள் நம்பி வந்த காலமது.. பெரும்பாலான அரசியல்வாதிகளை எடுத்துக் கொண்டால் அவர்களுடைய‌ அரசியல் நடவடிக்கைகளுக்கும் அவர்களது சுய‌ குண இயல்புகளுக்கும் இடையில் பெரும்பாலும் சம்பந்தம் இருப்பதில்லை. தங்கள் அரசியல் லாபத்திற்காக எந்த விதமான நாடகத்தையும் நடத்தத் தயாராக இருக்கும் மேகா நடிகர்க‌ள் அவர்கள்.. இதற்கு உதாரணமாக புலிவால் பிடிக்கும் தமிழக‌ அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ள‌ முடியும்… அன்று முள்ளி வாய்க்காலில் புலிகளின் பிடியில் அந்த அப்பாவி வன்னிச் சனங்கள் சிறை பிடிக்கப்பட்டு மனிதக் கேடயங்களாக மாற்றப்பட்டபோது அவர்களின் மனங்கள் வெடித்துச் சிதறிக் கதறிய‌ கூக்குரல் இந்த அரசியல்வாதிகளின் காதில் விழவேயில்லை… ஐரோப்பிய யூனியன் அமெரிக்கா நோர்வே ஜ‌ப்பான் முதலிய நாடுகள் புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனித்து அங்குள்ள வன்னி மக்களை உடனே விடுவித்து அவர்களை பாதுகாப்பு வலயத்திற்குள் செல்ல‌ அனுமதிக்க வேண்டும் என்று புலிகளை வற்புறுத்த‌ இந்த தமிழக அரசியல்வாதிகளோ இலங்கை அரசாங்கம் புலிகளுக்கெதிரான‌ போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றுதானே கூக்குரலிட்டார்கள்….ஆம் அவர்களுக்குத் தேவை வன்னித் தமிழர்களின் விடுதலையல்ல‌ ஆனால் இலங்கை இராணுவத்தின் வியூகத்தினுள் மாட்டிக் கொண்டு திக்குமுக்காடிக் கொண்டிருந்த‌ அந்த‌ பாசிசப் புலிகளின் விடுதலை… அவர்களுக்கு இதயம் என்றதொன்று இருந்து அதில் மனித நேயம் என்றதொன்று இருந்திருந்தால் அந்த அப்பாவிச் சனங்களை உடனே விடுவித்து அவர்களைப் பாதுகாப்பு வலயத்திற்குள் செல்ல அனுமதிக்கும்படி புலிகளுக்கு அழுத்தம் கொடுத்து கூக்குரலிட்டிருப்பார்கள். ஆனால் அவர்கள் கதறியழுததெல்லாம் யாருக்காக? ஆம்… அவர்களுக்குத் தேவை புலிகளின் விடுதலை… அவர்களை எப்படியாவது விடுவித்து தங்கள் அரசியல் நிலையை பாதுகாத்து அதன் பலனாக அவர்களிடமிருந்து கிடைக்கும் நன்கொடையினால் தங்கள் பணப் பெட்டிகளையும் நிரப்புவதுதான் முக்கியம். ஆகவேதான் புலிகளுக்கெதிரான போரை உடன் நிறுத்தும்படி இலங்கை அரசாங்கத்தை வற்புறுத்தி அழுத்தம் கொடுத்தார்கள்.. புலிகள் பிடியிலிருந்து அந்த அப்பாவிச் சனங்களில் பலர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து தப்பியோட முயற்சித்த வேளைகளில் அவர்களை பெண்கள் பிள்ளைகள் வயோதிபர் என்ற பாகுபாடில்லாமல் பின்னிருந்த‌ புலிப் பட்டாளம் சுட்டுத் தள்ளிய போதெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இந்தப் பொய்யர்கள் கூட்டம் இன்று இலங்கைத் தமிழர்களுக்காக கண்ணீர் வடிப்பது என்பது வெறும் பம்மாத்து வேலை என்பதை இவர்களின் மாய்மாலங்களை அறிந்தவர்கள் புரிந்து கொள்வார்கள்.. நமது வன்னிச் சனங்கள் மீதுதான் இந்தத் தமிழக புலிவால் அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை என்று பார்த்தால் அவர்களுக்கு படியளந்து வந்த பிரபாகரனின் குடும்பத்தார் மேலும் அவர்களுக்கு எள்ளளவும் அக்கறை இருந்திருக்கவில்லை என்பது பிரபாவின் தாயார் பார்வதியம்மாவின் விடயத்தில் தெளிவாகத‌ தெரிந்தது… அவரது இந்திய வருகையின் போது இவர்களுடைய செயற்பாடுகள் இவர்களுடைய தன்னலத்தை அப்படியே படம் பிடித்துக் காட்டியது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இலங்கையிலிருந்து மலேசியாவிற்கு மகிந்தாவின் அரசாங்கத்தால் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்ட அந்த‌ மூதாட்டிக்கு மனிதாபமான அடிப்படையில் தங்கள் நாட்டில் மருத்துவ உதவி பெறுவதற்கு இந்தியா விசா வழங்கியிருந்தது. அவர் பிரபாவின் தாயார் என்று தெரிந்திருந்தும் 81 வயதான அவருக்கு முன்னர் தமிழ் நாட்டில் தன் மகளுடன் அவர் தங்கியிருந்த கால கட்டத்தில் அவருக்கு சிகிச்சை அளித்த தமிழகத்தைச் சேர்ந்த ஒரு குறிப்பிட்ட‌ வைத்தியரிடமே மேற் கொண்டு அவர் சிகிச்சை பெற விரும்பியதற்கு மதிப்பளித்தே இந்திய அரசாங்கம் விசா வழங்கியிருந்தது. ஆனால் பார்வதியம்மா வரப்போவதை ஏற்கெனவே அறிந்திருந்த வை.கோ மற்றும் ராமதாஸ் நெடுமாறன் போன்றோர் இந்த வருகையின் மூலம் தங்கள் பொலிட்டிக்கல் ஸ்டண்டைக் காட்டும் நோக்கத்துடன் அவரை வரவேற்கிற பேர்வழிகளாக‌ விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர். இப்படித் தாங்கள் அவரை வரவேற்க செல்வதை மத்திய அரசாங்கம் அறிந்தால் தமிழகத்தில் வீண் குழப்பங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறைய‌ இருப்பதால் அவரை திருப்பியனுப்பத் தயங்காது என்பதை நன்கு அறிந்திருந்தும் இவர்கள் வேண்டுமென்றே விமான நிலையத்திற்கு வரவேற்கச் சென்றார்கள். ஒருவேளை பார்வதியம்மா இந்தியாவில் நுழைய அனுமதிக்கப்பட்டால் (கலைஞர் கருணாநிதியை வீழ்த்த) அவரை தங்களுடன் அழைத்துச் சென்று தங்கள் அரசியல் மேடைகளில் இருத்தி இவர்தான் பிரபாகரச் செம்மலை ஈன்றெடுத்த தாய்க்குலம் இவரை இலங்கையிலிருந்து அந்தக் தமிழினத் துரோகி கொடும்பாவி மகிந்தா நாடு கடத்தியதால் இன்று நமது தாய் மண்ணை தேடி வந்திருக்கிறார்.. அப்படி நாடு கடத்திய மகிந்தாவுடன் நட்புறவாக கலைஞர் கருணாநிதி நடந்து கொள்கிறார் என்று தமிழக மக்களுக்கு வெறுப்பேற்றி பிரச்சாரம் செய்து பார்வதியம்மாவின் பரிதாபகரமான தோற்றத்தை தமிழக மக்களிடம் மேடைகளில் காட்டி அவர்களை நம்பச் செய்து அவர்களை தங்கள் பக்கம் திரட்டி எலக்சன் வோட்டுகளை தங்கள் பக்கம் கணிசமான அளவு அதிகரித்திருப்பார்கள். அங்கே இலங்கை இராணுவம் கர்ப்பிணிப் பெண்களின் வயிற்றைக் கிழித்து அதிலிருந்த கர்ப்பக் குழந்தைகளை வெளியிலெடுத்து தரையிலடித்து கொலை செய்கிறார்கள் என்று கூசாமல் பொய் சொல்லி தமிழக மக்களை கொதிக்கச் செய்த இந்த தன்னலவாதிகளுக்கு அன்று இப்படியொரு பித்தலாட்டத்தைச் செய்வதென்பது பெரிய காரியமல்ல… பாவம் அந்தப் பார்வதியம்மா.. அவர் செய்த தவறு பிரபாகரன் என்ற அடங்காப் பிடாரியை ஈன்றெடுத்தது மட்டும்தான்… ஆதியிலிருந்தே தன் மகனது வன்முறை வழியை விரும்பாதவர் அவர்.. எத்தனையோ முறை எடுத்துக் கூறியும் அவையொன்றையும் கேளாமல் வீட்டை விட்டு வெளியேறி தான்தோன்றித் தனமாக வேண்டாத கூட்டங்களுடன் கூட்டுச் சேர்ந்து தன் தாய் சொல்லைத் தட்டி தன்னையும் கெடுத்து தன் தாய் மண்ணையும் கெடுத்தார் அவர். என்ன செய்வது அதுவெல்லாம் விதியின் பயன்… நட்டவனுக்கு நச்சு மரமென்றாலும் பட்சம் என்பதுபோல் பிரபாவை ஈன்ற குற்றத்திற்காக அவர் தலைமறைவாக இருந்து செலவுக்கு பணம் கேட்டு ஆளனுப்பும் போதெல்லாம் எட்டாம் வகுப்புடன் கல்விக்கு கல்தா கொடுத்து விட்டு தந்தையின் அறிவுரைக்கு அல்வா கொடுத்து வெறுப்பேற்றிய பிரபாகரன்மேல் கடுப்பிலிருந்த திருவேங்கடம் வேலுப்பிள்ளைக்கு தெரியாமல் அவ்வப்போது பணம் கொடுத்தனுப்பினார் அவர்.. ம்ம்ம்ம் என்ன செய்வது அந்த‌ பார்வதியம்மாவின் பெத்த மனமோ பித்து இந்த பித்தலாட்டப் பிள்ளையாண்டானின் மனமோ கல்லாகிப் போயிருந்தது.. தற்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடலில் ஒரு பாகம் இயங்க முடியாத நிலையில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக‌ இந்தியாவை நாடி வந்த அவரை இந்திய அரசாங்கம் விமானத்திலிருந்து இறங்க விடாமலேயே மலேசியாவிற்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்ட இந்த பரிதாபகரத்திற்கு யார்தான் காரணம்?.. ஆம் அவர்கள்தான் தமிழக புலிவால் அரசியல்வாதிகள்… அதுசரி பார்வதியம்மாவை வரவேற்க வைகோ ராமதாஸ் நெடுமாறன் குழுவினர் செல்கிறார்கள் என்பதை மத்திய அரசாங்கத்திற்கு அறிவித்தவர் யார்? ஆம்..அவர்கள் வேறு யாருமல்ல இலங்கைத் தமிழர்களையும் பிரபாகரனையும் வைத்து அங்கே தமிழகத்தில் அரசியல் நடத்தும் அதே தமிழக அரசியல்வாதிகள்தான்… பிரபாகரனுடன் மாத்திரமல்ல அவரது பெற்றோருடனும் தாங்கள்தான் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் என்பதைக் காட்டுவதில் ஏற்பட்ட போட்டியின் விளைவுதான் பார்வதியம்மாவை மத்திய அரசாங்கம் திருப்பியனுப்பியது. இன்று இலங்கைத் தமிழர்களின் வழிகாட்டியாக இவர்கள் இருப்பதற்கு இவர்கள் எவரிடமும் எந்தவிதமான தகுதிகளும் இல்லை என்பது அவர்கள் செயற்பாடுகளில் இருந்து தெட்டத் தெளிவாகத் தெரிகிறது… பிரபாகரனாதியோரை இலங்கை இராணுவம் முள்ளிவாய்க்காலில் சுற்றி வளைத்தபோது உடனே போரை நிறுத்தும்படி தமிழகத்தில் தீக்குளித்த முத்துக்குமாரனின் இறுதி ஊர்வலத்தில் “வணக்கம்! வணக்கம்! வீர வணக்கம்!” என்று புலிகளின் கோசத்தை எழுப்பியபடி அந்த ஊர்வல ஊர்தியில் ஏறி நின்று முழக்கமிட்ட விடுதலைச் சிறுத்தையின் தலைவர் திருமாவளவன் இந்த சந்தர்ப்பத்தில் பிரபாகரனுக்கு அடுத்த இடத்தில் இருக்கும் வாரிசு தானேதான் என்பதைக் காட்ட முற்பட்டார்… இது சீமான் வைகோ ராமதாஸ் நெடுமாறன் குழுவினருக்கு எரிச்சலை மூட்டக் காரணமாக அமைந்தது… ஆகவே அவர்கள் எப்படியாவது திருமாவளவனை காய் வெட்டி விடும் ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்க‌ வைத்து விட்டது. பிரபாகரனாதியோரின் பயங்கவாதத்திற்கு மகிந்தா முற்றுப்புள்ளி வைத்த பின்னர் வைத்திய சிகிச்சைக்காக இந்தியாவிற்கு வருகை தந்த பார்வதியம்மாவின் விடயம் அப்போது கை கொடுத்தது. ஆகவே அவர் சிகிச்சைக்காக தமிழகம் வரப்போகும் விடயத்தை திருமாவளவனுக்கு தெரிந்து விடாதபடி மிகவும் இரகசியமாக பாதுகாத்தார்கள் அந்த சூதாட்டத் தருமர்கள்… பார்வதியம்மா திருப்பி அனுப்பப்பட்ட பின்னர் ஊடகங்களுக்கு பேட்டியளித்த திருமாவளவன் தான் இரண்டு நாட்களுக்கு முன் மலேசியாவிலுள்ள‌ பார்வதியம்மாவின் உறவினருடன் அவரது உடல் நலம் தொடர்பாக தொலைபேசியில் பேசியதாகவும் பார்வதியம்மா சிகிச்சைக்காக‌ இந்தியா வரப்போவது பற்றி அப்போது அவர்கள் தன்னிடம் எதுவும் கூறவில்லை என்றும் அவர் கூறியிருப்பதில் இருந்தே அவர் எதையோ மறைக்கிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது. அது மட்டுமல்ல அவர் திருப்பியனுப்பட்ட பின்னர் தான் பலமுறை மலேசியாவை தொடர்பு கொள்ள முயற்சித்ததாகவும் தனக்கு லைன் கிடைக்கவில்லை என்று கூறியிருப்பதும் நம்பத் தகுந்ததல்ல‌. அப்படியெல்லாம் லைன் கிடைக்காமல் போவது என்பது இந்த நவீன யுகத்தில் சாத்தியமில்லாத ஒன்றாகும். மேலும் தமிழக‌ முதல்வர் கருணாநிதிக்கும் அது பற்றி ஒன்றுமே தெரியாது என்ற ஊடகங்களுக்கு கூறி அவரையும் காப்பாற்ற அவர் முயற்சித்ததில் இருந்தே வழமை போலவே சமய‌ சந்தர்ப்பத்திற்கேற்றபடி கட்சிமாறி கருணாநிதியில் காவிச் சால்வைக்குப் பின்னால் மறைந்து பச்சோந்திந்தித்தனமான‌ அரசியல் நடத்துகிறார் அவர் என்பதும் வெட்ட வெளிச்சமாக தெரிந்தது. ஆகவே பார்வதியம்மாவை வரவேற்க வைகோ நெடுமாறன் குழுவினர் விமான நிலையத்திற்கு செல்கிறார்கள் அங்கு அவர்கள் பார்வதியம்மாவை வரவேற்பதனால் அவர்கள் புகழேறிவிடும் என்பதற்காகவும் தனக்கு தெரியாமல் அவர்கள் ஆடிய இந்த நாடகத்திற்கு அவர்களை பழிவாங்கும் நோக்கத்திற்காகவும் திருமாவளவன் மத்திய அரசாங்கத்திற்கு இந்த விபரங்களை போட்டுக் கொடுத்திருக்க வேண்டும் என்றுதான் கருத‌வேண்டியுள்ளது. பார்வதியம்மா திருப்பியனுப்பப் பட்டதற்கு தமிழ் நாட்டு அரசாங்கத்திற்கு எதிராகவோ அல்லது மத்திய அரசாங்கத்திற்கு எதிராகவோ ஒரு சிறு கண்டன அறிக்கை கூட திருமாவளவன் வெளியிடாமல் புலிகளின் பாணியில் அது ஒரு துன்பியல் சம்பவம் என்று கூறியிருப்பது இந்தச் சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துகிறது… திருப்பியனுப்பட்ட அந்த அம்மையார் பின்னர் மலேசியாவிலிருந்து தனது உடல்நிலை குறித்து மிகவும் உருக்கமாக கருணாநிதிக்கு தான் அங்கு சிகிச்சை பெறுவதற்கு அனுமதியளிக்கும்படி எழுதியது மட்டுமல்லாமல் இறுதியில் அவரைப் புகழ்ந்தும் வாழ்த்தியும் எழுதியிருந்ததிலிருந்து அவருக்கு கருணாநிதியின்மேல் எந்த விதமான காழ்ப்புணர்வோ அல்லது வெறுப்புணர்வோ இல்லை என்பதை தெளிவாக்குகிறது. கடிதத்தை படித்து மனமிரங்கிய கருணாநிதியும் அவருக்கு தமிழகம் வருவதற்கு விசா வழங்கும்படி மத்திய அரசாங்கத்திற்கு பரிந்துரைத்தது மட்டுமல்லாது தமிழக அரசே அவரது வைத்தியச் செலவுகளை ஏற்பதாகவும் உறுதியளித்தார். பார்வதியம்மா அவர்கள் அவரது உறவினர்கள் வீட்டில் தங்குவதற்கோ அல்லது அவர்களை விஜயம் செய்வதற்கோ எவ்வித தடைகளையும் தமிழக அரசு விதிக்கவில்லை ஆனால் தமிழக அரசியல்வாதிகளை சந்திப்பதற்கு மட்டும் தடை விதிக்கப்பட்டிருந்தது.. மனிதநேயத்திலோ அல்லது சமாதான வழிகளிலோ நாட்டமில்லாத… நம்பிக்கையில்லாத.. இந்த அசுரத்தனமான‌ புலிவால் தமிழக அரசியல்வாதிகளை பார்வதியம்மா சந்திப்பதற்கு தமிழக அரசு தடை விதித்தது நியாயமானதுதான் என்பதை சிந்திக்கத் தெரிந்த எவருமே ஏற்றுக் கொள்வார்கள். ஆனால் இறுதி நேரத்தில் மலேசியாவிலிருந்து இந்தியா செல்வது பற்றிய‌ தனது தீர்மானத்தை கைவிட்டு இலங்கைக்கே திரும்பியது அவருக்கு மகிந்தா அரசாங்கத்தின்மேல் வைத்திருக்கும் நம்பிக்கையை காட்டுகிறதா?. புலிகள் சார்பு இணையத்தளங்களில் எழுதியிருந்ததுபோல் அவரும் அவரது மறைந்த கணவன் திருவேங்கடம் வேலுப்பிள்ளை அவர்களும் சிறையில் அடைக்கப்பட்டு துன்புறுத்துப்பட்டார்கள் என்பது உண்மையாக இருந்திருந்தால் தான் அனுபவித்த துன்பங்களையும் துயரங்களையும் துன்புறுத்தல்களையும் மறந்து அவர் மீண்டும் இலங்கைக்குள் காலடி எடுத்து வைக்க எண்ணியிருக்க மாட்டார். என்பது உண்மையாகும். இது மனோதத்துவ ரீதியிலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதொன்றாகும். புலிகளால் யாழ்ப்பாணத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் யாழ்ப்பாணத்தில் பிரபாகரனாதியோரின் கொடுங்கோல் ஆட்சி முடிவுக்கு வந்து அங்கே பயமின்றி வாழக்கூடிய சூழ்நிலை உருவான பின்னும் அவர்கள் மீண்டும் அங்கே வந்து வாழத் தயங்குவது..பயப்படுவது… இந்த மனோரீதியான பாதிப்புகளால்தான். ஆனால் பார்வதியம்மாவிற்கு இலங்கைக்கு திரும்பி வருவதில் எந்த விதமான‌ பயமோ..பதட்டமோ இருந்திருக்கவில்லை.. காரணம்.. அவரும் அவர் கணவரும் இலங்கை இராணுவத்தால் அகதிகள் முகாமில் வைத்து கைது செய்யப்பட்டபோது சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைக்கப்படாமல் பத்திரமாக ஒரு இடத்தில் பாதுகாப்புடன் சகல வசதிகளுடனும் தங்க வைக்கப்பட்டிருந்தார்கள் அத்துடன் திரு. வேலுப்பிள்ளை அவர்களுக்கு சிறந்த வைத்தியர்களால் தகுந்த சிகிச்சையும் அளிக்கப்பட்டிருந்தது… மேலும் அவரது இறுதி நேரத்தில் கொழும்பிலுள்ள பிரபல தனியார் வைத்தியசாலையிலும் அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டதும் குறிப்பிடத் தக்கது. ஆகவே பார்வதியம்மா அவர்களுக்கு இந்திய அரசியல்வாதிகள் மேல் இருக்கும் நம்பிக்கையைவிட இலங்கை அரசாங்கத்தில் இருக்கும் நம்பிக்கை அதிகம் என்றுதானே கொள்ள வேண்டும்.. இறுதிக்கட்டத்தில் புலிகளுக்கு குட்பை சொல்லி விட்டு மக்களோடு மக்களாக அகதிகள் முகாம்களுக்குள் வந்து முடங்கிய தமிழினி ஜோர்ஜ் மாஸ்டர் தயா மாஸ்டர் போன்றோர் எவருக்குமே எந்தவித மகிந்தாவின் அரசு இழைத்துவிடவில்லை..மாறாக அரவணைக்கப் பட்டிருக்கிறார்கள்.. சூசையின் மனைவியும் பிள்ளைகளும் தமிழ்ச் செல்வனின் மனைவியும் பிள்ளைகளும் பாதுகாப்பாக ஒரு மறைவிடத்தில் தங்க வைக்கப்பட்டு சகல வசதிகளுடன் பராமரிக்கப்படுகிறார்கள்..அவர்கள் பிள்ளைகள் மேற்கொண்டு தங்கள் கல்வியைத் தொடர வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன‌… இதன் உச்ச கட்டமாக தலை மறைவாகியிருந்த புலிகளின் முக்கிய புள்ளியான‌ கே.பியை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்து தற்போது ஆனந்தசங்கரி ஐயாவே பொருமி வெடிக்கும்படிக்கு அவருக்கு மகிந்தாவின் அரசு ராஜ உபசாரம் செய்கிறது ஏன்?..இவைகளை எல்லாம் எதற்காக மகிந்தா செய்கிறார்?.ஒன்பது கனடா புலிப்பினாமிகள் திடீரென்று கே.‍பியுடன் கைகோர்த்து இலங்கை வந்து தாங்கள் அரசாங்கத்துடன் சேர்ந்தியங்கி நாட்டைக் கட்டியெழுப்ப தாங்கள் தயார் என்று அறிவிப்பதற்கான‌ காரணத்தின் பின்னணி என்ன? ஆச்சரியமான உண்மைகளுடன் அடுத்த பாகம் தொடர்கிறது (தொடரும்)  Read More »

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 55)-சித்திறெஜினா..!

உள்ளதைச் சொல்லுகிறேன் – ஊர்க்குருவி..!

உள்ளதைச் சொல்லுகிறேன்  –... 

உள்ளதைச் சொல்லுகிறேன்  - ஊர்க்குருவி..!

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். – பாகம்2

“இலங்கை அரசு அழிக்கவும், மறைக்கவும் நினைக்கும் இலங்கைத் தமிழ் வரலாற்றின் பக்கங்களும், தமிழர்களை அழிவுபாதைக்குக் கொண்டு சென்ற தமிழர்களின் வரலாற்றின்  பக்கங்களும்…” தொடர் பக்கங்கள்….பாகம்2  சிங்களவர்களின் காலத்திற்கு முற்பட்ட காலத்திலேயே தமிழர்கள் இலங்கையில் இருந்தார்கள் என்பதற்கும், அவர்கள் இலங்கையினை ஆண்டார்கள் என்பதற்கும் சான்றுகள் உள. ஆயினும் சிங்களவர்கள் தமது வரலாற்றைத் தக்கபடி நிலைநாட்டிக்கொண்டார்கள். தமிழர்கள் நாமோ, அதனை அன்னியன் கையில் கொடுத்துவிட்டோம். இன்று தமிழர்களின் ஆரம்ப வரலாற்றை விளக்குவதற்கு சிங்களவனின் வரலாற்று நூலாகக்கருதப்படுகின்ற “மாகாவம்சம்” “சூழவம்சம்” என்ற வற்றை நாடும் அளவிற்கு துர்ப்பாக்கிய சாலிகளானோம். ஆயினும் வேறு பல ஆதாரங்களும், வரலாற்றுச்சம்பவங்களும் எமது தாயகம் தொடர்பாகவும் தன்னாட்சிதொடர்பாகவும் அது காலத்துக்குக்காலம் அயலானிடம் பறிபோயும், வஞ்சகவலைகளால் சிதைவுற்றும் சின்னாபின்னம் ஆக்கப்பட்டதும் தெளிவுறத் தெரியும் அளவிற்கு பின்னுள்ள பகுதி கைகொடுக்கும்.     தமிழ் அரசர்கள், யாழ்ப்பாணத்து அரசர்கள், இலங்கை அரசர்கள்… என்று பார்க்கும் போது, இந்தியாவின் பங்களிப்பு தற்போதண்றி ஆரம்ப காலத்தில் இருந்தே பிரிக்கமுடியாததாக இருக்கிறது. விஜயனின் வருகைக்கு முன் ஒரு பாரியச் சிதைவொன்று (சுனாமியைப்போன்று) இலங்கையில் இடம்பெற்றுள்ளது. அச் சிதைவினால் இலங்கைப் பழங்குடி  தமிழர்களின் அடியான நாகர், இயக்கர், கின்னரர் போன்றோர் சிதைவடைந்தும் சிறு அளவிலும் குறைக்கப்பட்டிருக்கின்றனர். இதனால் தொகையில் சிறுமைப்பட்டிருந்த பழங்குடியினர் பெரும்பாலானோருடைய தாக்கத்திற்கு முகங் கொடுக்கமுடியாது அவர்கள் வரலாறு புதைக்கப்பட்டிருக்க வேண்டும். அல்லது, அச்சமுகத்தில் இருந்து விலகியிருக்கப்பட்டிருக்க வேண்டும். இலங்கையில் (வடபகுதி) யாழ் ஆட்சியாளரின் ஆரம்பம் பொதுவா “கூழாங்கைச் சக்கரவர்த்தி” என்பவனோடு ஆரம்பிக்கிறது. ஆனால், அதற்குமுன்  இலங்கை அரசாட்சியில்லை என்று சொல்வதற்கில்லை. வரலாற்றில் வெளிப்படவில்லை என்பதற்கான ஆதாரம் மேலே தெளிவு படுத்தப்பட்டிருக்கிறது. இதற்குக் காரணம், பெரும்பாலும் தமிழர்கள் பழங்குடியினராகக் காணப்பட்டமையும் சிதைவுக்குள்ளாக்கப்பட்டமையுமாகும். இவ்வரசனுடைய ஆட்சி தொடர்பாக சில கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது. அதற்குமுதல் யாழ்ப்பாணத்தின் வரலாறு தொடர்பாக சிலவிடையத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஆழமாகத்தெரிந்து கொள்ள அதனைப் பிறிதொரு இடத்தில் பார்ப்போம். யாழ்ப்பாணம் ஆரம்பத்தில், “மணல்த்திடர்” என்றும் “மணற்றிடர்” என்றும் அழைக்கப்பட்டது. பின்னர், யாழ்ப்பாணன் என்பவனுக்குரியதாக மாறியதன் காரணத்தால் அது யாழ்ப்பாணம் என்று பரினாமமானது. இதனுடைய உரிமையாளரான யாழ்ப்பாணன் இந்தியாவில் இருந்து அரச பரம்பரையில் உள்ள ஒருவரை அழைத்து அதனை ஆளவைத்தாராம். மேற்சொன்ன இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை. காரணம் அக்காலத்தில் ஒருவருக்கு ஒரு இடம் சொந்தமென்றால் அதற்குச் செந்தக்காரனே அரசன். அப்படியிருக்க இன்னொரு அரசனை உருவாக்க அவசியமென்ன? மேலும் இன்று சொல்வது போலல்லாமல், இந்தியத் தொடர்புடைய அரசு மேலும் இந்தியாவை உறவுள்ளதாக மாற்றியிருக்குமே தவிர, குறைத்திருக்காது. இன்னொரு விடையத்தை நாம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான தமிழ் வரலாறு (இலங்கைத்தமிழ்) பிற மொழிகள் மூலமே விபரிக்கப்பட்டது. அதன் விம்பமே பெயர்கள் மாற்றப்பட்டும் வரலாறு மறைக்கப்பட்டும் உள்ளது. உதாரணம் “இயேசுக் கிறீஸ்து” “ஜீசஸ் கிறைஸ்ட்” “யேசு நாதர்” என்பன ஒரே ஆளைக் குறிக்கிறது. பெயர் எக்காரணங் கொண்டும் மொழிமாற்றத்திற் குட்படக்கூடாது!!! அது போலவே இடமும். உண்மையிலே ஒரு சம்பவம், “ஒருவருடைய பெயர் தமிழில் “செபமாலை” அவர் தனது பெயரை வெளிநாடு சென்றதும் தன்னை “றொசாறியோ” என்று அறிமுகப்படுத்தினார் இப்போது அவரை முன்பு அறிந்தவர் பின்பு அறிந்தவர் என்று இருபகுதி காணப்படுகிறது. பாவனையில் இருக்கும் இருபெயரும் கருத்தில் ஒன்று என்பதற்காக அது சரி என்று ஒப்புக்கொள்ளலாமா? இவ்வாறான சிக்கல்களே வரலாறு மங்கியதற்கும் பிறிதாக்கப்பட்டதற்கும் காரணமாகும்.தற்போது சிங்களவர் என்று சொல்வோர் கூட தனிச் சிங்களவர் இல்லையே! இணைப்புச் சிங்களவர். எனது ஒன்று விட்ட சகோதரிகள் யாழ்ப்பாணத்தில் எம்முடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த போது அசல் தமிழர்கள். பின்னர் இடம்பெயர்ந்த காலத்தில் வவுனியாவில் அவர்கள் அசல் சிங்களவர்கள். காரணம் அவர்களுடைய தந்தை தமிழ் நன்றாய்ப்பேசக்கூடிய அசல்ச் சிங்களவர் எனவே அவர்கள் பச்சோந்தியிலும் மேலானமுறையில் காணப்பட்டனர். இது இப்படியிருக்க பல்லாயிரம் ஆண்டு கடந்த வரலாறு????… வரலாறு பல்வேறு இடங்களில் ஒன்றுக்கொன்று, முன்னுக்குப்பின் முறனான விடையங்களைச் சுட்டுகிறது, அதாவது யாழ்ப்பாண மன்னனான இவனுடைய ஆட்சியின் தொடக்கம் “சாலிவாகன் காலம் ???” கி.மு. 101 என்று ஒருசிலரும், 13ம் நூற்றாண்டு என்றும் தொடர்பு அறுந்து காணப்படுவதால் அக்காலத்திற்கும் தற்காலத்திற்கும் கணிப்பிடும் கால அளவிலும் மாற்றங்கள் இருந்திருகவேண்டும். அதன் காரணமும் இதற்குத்தடையாக அமைந்திருக்கலாம். உதாரணம், ஆங்கிலேயரின் வருகைக்கு முன்னர் நமது கணிப்பீடுகள்… போத்தல், றாத்தல், கட்டை, சாண்,… அதற்குமுன்னர் ஒருபாதம் இருபாதம், ஒருகாததொலைவு, … இவ்வாறான கணிப்புகள் இருந்தன அவற்றின் கணிப்பிற்கும், தற்போதைய கி.மீ, லீற்றர், கி.கி., மீற்றர், போன்ற கணிப்பிற்கும் பாரிய மாற்றங்கள் உள்ளன. மேலும் அக்கால எழுத்தாளர்கள், தமது எழுத்துக்களில் ஒருசிலரைக் உருவாக்கியும், தேவைப்படும் இடத்தில் தாமே அந்த சம்பவத்தில் புகுந்தும் (ராமாயணத்தில்-வேதவியாசர், வசிஷ்டர்) வரலாற்றைப்புனைவதற்கு இலக்கணம் இடங்கொடுத்தது. எனவே வரலாற்று ஆவணங்களையும், ஆதாரங்களையும் சற்று எமது எண்ணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். இலங்கையின் சரித்திரம் என்று பார்க்கும் போது, முற்காலத்தில் சுரேந்திரன், அசுரேந்திரன், இச்சயம்பன், யாளிமுகன், ஏதி, வித்துகேசன், சுகேசன், மாலியவான், (இலங்காபுரி என்னும் பெயர் இவன்காலத்தில் உதயமானதெனலாம்), சுமாலி, (சூரியப் பிரகாசம் விமானம் இருந்த காலம்) , வச்சிரவாகு, வைச்சிரவாணன்(குபேரன் புட்பக விமனமம் வைத்திருந்தான்), குபேரன் இராவணன் விபீஷணன் (பசுபதி) இந்திரஜித் ஆதிசகாயன் … … போன்ற வரலாற்று நபர்களையும் புரட்டிப்பார்க்க வேண்டும். இவர்கள் வெறும் கதாபாத்திரமல்ல. அத்தோடு எல்லாளன் சரித்திரம் கி.மு. 205- 161 என சிங்கள மிகப்பெரிய வரலாற்றுப் புத்தகமான மகாவம்சம் எடுத்துக்காட்டும் வரலாறு எங்கே போனது? துட்டகைமுனு என்னும் மன்னனால் எல்லாளன் கொல்லப்பட்டதும் எல்லாளனுடைய சமாதியின் இடத்தை (தகனம்செய்த) மரியாதைக்குரிய இடமாக தூபி அமைத்து, அனுசரித்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது ஆனால் காலப்போக்கில் சிங்கள இனவாத சமுகம் அதனை மாற்றி அமைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.(ஆதாரம் மகாவம்சம், “The Pali Literature of Ceylon”p.34 ). யாழ்ப்பாணத்துச் சரித்திரம் என்று பார்க்கும் போது சரித்திரத்தில், கூழாங்கைச் சக்கரவர்த்தி என்பவனில் இருந்து ஆரம்பிக்கிறது. ஆனால் அது முற்றுமுழுதாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. காரணம் அதற்குமுதல் வரலாறுகள் (மேற்குறிப்பிட்டவர்கள்) வெளிவராமல் போனதும், மக்கள் தொடர்பு குறைந்து காணப்பட்டதும், பலங்குறைந்து காணப்பட்டதும் காரணமாக இருந்திருக்கலாம். அதன் விபரங்கள் புராணங்கள் மூலம் நாம் புடம்போட்டுக் காட்டக்கூடியதொன்றாகும். இந்த இலங்கையானது, “இராவணனின் இராஜதானியாக விளங்கியது. விசுவ கர்மாவினால் நிர்மாணிக்கப்பட்டது. இது தென் சமுத்திரத்திலே திரிகூட பர்வதத்திலே அமைக்கப்பட்ட பட்டணமாகும்” என்று வரலாற்று ஆசிரியர் ஒருவர் குறிப்பிடுகிறார் என்பதை மேலே எடுத்துக்காட்டினேன். இந்த அரசானது ஆரம்பத்தில் “மால்யவானுக்கு” இராஜதானியாக இருந்தது. காலப்போக்கில் பெரும் செல்வந்தராக விளங்கிய குபேரனுக்கு இராஜதானியாக அமைந்து அதன்பின், பெரும் பலம் கொண்டவனும், வரம் பெற்றவனுமான இராவணனால் அபகரிக்கப்பட்டது. இந்த இராவணனின் தம்பிகளுள் ஒருவன் விபீசனன். வசிர வசுவுக்கு கையேசியிடத்தில் பிறந்த மூன்றாவது புதல்வன். இந்த விபீசனன், இராவணன் சீதையைக் கவர்ந்து வந்த போது, சீதையை மீண்டும் இராமனிடத்தில் கொண்டு போய் விடும்படி பலமுறை பலவகையில் எடுத்து உரைத்தவன். ஆனால் இவனுடைய எந்தப் பேச்சுக்களுக்கும் தமையனான இராவணன் செவி கொடுக்கவில்லை! இராவணனின் தவறைச் சுட்டிக் காட்டி எந்தப் பிரதிபலிப்பையும் அறியாத விபீஷனன், தன் தமையனை விட்டு விட்டு, இராமனிடம் போய்ச் சரணாகதி அடைந்தான். இராமனும் அவனுக்கு அபயம் அளித்தான். இராவணனைச் சங்காரம் செய்து அழித்தபின்னர் இந்த விபீஷணனுக்கு இராவணனின் அரசாக இருந்த இந்த இலங்காபுரி என்னும் ஈழமண்டலத்தை உரிமையாக்கி, அவனை அரசாளச் செய்தார் இராமர். (இது தொடர்பாக ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன் தொடர்பு கருதி மீட்டுள்ளேன்) இந்த விபீஷணன் (சிலர் வேறு அரசனைக் காட்டுகின்றனர்) அரசாண்ட காலத்தில் அவனது சபையில் “யாழ்”வாசித்து அவனை மகிழ்வித்த  “பாணன்” ஒருவனுக்கு தனது அன்பளிப்பாக “மணற்தீடை” என்ற பரப்பை வழங்கினான். அது காடு நிறைந்த பகுதியாகக் காணப்பட்டது அதன்பின்னர் அப்பகுதி “யாழ்ப்பாணம்” எனப்பெயர்பெற்றது. இதன்கால வரைகள் நிற்சயித்துக்கூறமுயாது உள்ளது. எனினும் இக்காலத்தில் மக்கள் இந்தியாவில் இருந்தும் சிலர் விஸ்தரிப்புக் காரணமாக வந்து குடியமற்றப்பட்டார்கள் என்பது வரலாறு. மக்கள் அதிகரிப்பின் பின்னர் பதிவுகள் வரலாற்றில் வெளிப்படதொடங்கியது. அதன்படி வெளிப்பட்ட அரச வம்சங்களாக… கூழாங்கைச் சக்க்கரவர்த்த்தி (கோளுறு கரத்துக் குரிசில், கூ.ஆரியச்சக்கரவர்த்தி ) இலங்கையில் பொதுவாக பலசிற்றர்கள் இருந்தும் யாழ்ப்பாணத்தை பெற்ற யாழ்ப்பாணனின் காலமுடிவில் அவன் தனக்குப்பின் யாழ்ப்பாணத்தை ஆழ பிரபல்யாமன வரலாறுகளின் தோற்றப்படி, இவ்வரசன் இந்தியாவில் இருந்த அழைக்கப்பட்டதாகவும், தசரதனின் மைத்தினனின் வம்சாவழித்தோன்றலில் ஒருவன் என்றும், சோழ வம்சத்தில் ஒருவன் என்றும், சிக்கல்ப் படுத்துகின்றனர். இன்னும் சிலர் 11ம் நூற்றாண்டளவில் இரஜேந்திர சோழனின் படையெடுப்பில் ஆரம்பித்தது என்றும், 13ம் நூற்றாண்டில் கலிங்கச் சக்கரவர்த்தியின் போரெடுப்பில் உதயமானதென்று சிலரும், மட்டுமல்லாது, “பாண்டிவளவன்” என்றொருவன் யாழ்ப்பாணப்பகுதி தகுந்த அரசாட்சி இல்லாததால் அண்மையில் உள்ள பெருந்தேசத்தில் இருந்து ஒருஅரசனை அழைத்ததாகவும், இன்னொரு பக்கம் செல்லப் படுகிறது. மேலும், தமிழ்ப் படைகளின் உதவியுடன், பெருங்கூட்டு ஆட்சிநடத்திய சிங்களவருடன் அப்போதைய தலைநகரான பொலநறுவையை கலிங்கத்து சக்கரவர்த்தி போர் செய்து, அவன்மூலம் தனி ஆட்சி நடத்தப்பட்டதாகவும், தனது பெயரை யாழ்ப்பாணத்தின் ஆட்சிக்காக “கூழாங்கைச் சக்கரவர்த்தி என்று பெயரிட்டு ஆண்டதாகவும் சுவாமி ஞானப்பிரகாசர், மற்றும் செ.இராசநாயகம் போன்ற அறிஞர்கள் கருதுகிறார்கள். எனினும் அக்காலத்திற்கு முன்னிருந்தே ஆட்சிகள் நிலவியது என்பது இதில் இருந்து தெரிகிறது. இவனது காலக்கணக்கு 13ம் நூற்றாண்டுகள் என்பதே தற்பொதைய கணிப்பீடாகும். இக்காலப்பகுதியில்தான் நல்லூர் இராசதானி கட்டப்பட்டதனால், இவ்வரசனே அனைத்து அரச திட்டங்களையும் யாழ்ப்பாணத்துக்கென அமைத்திருக்கிறான் என்று எடுத்துக்கொள்ள முடிகிறது. எனினும் நல்லூர் மேலும் மெருகுபடுத்தப்பட்டது 15 நூற்றாண்டுகளுக்குப் பின்னரே. காரணம் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னர்கள் (புலிகள் உட்பட) பொதுவாக இப்பிரதேசத்திற்கு பெரும் முக்கியத்துவம் கொடுத்தமையாகும். இவ்வரசனின் பின்னர் “குலசேகர சிங்கையாரியன்” 10 வருடகாலமாக அதாவது கி.பி 1246ல் இருந்து 1256 வரை யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்தான். இவன் கூழாங்கைச் சக்கரவர்த்தியின் மகனாவான். இவன் நாட்டில் பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை ஏற்படுத்தி அபிவிருத்தியைத் தூண்டுவிக்கும் பொருட்டு விவசாயத்தைப் பெருக்கினான். பின்னர் இவனுடைய குமாரனான “குலோத்துங்கசிங்கையாரியன்” ஆட்சியமர்ந்து தந்தை வழியில் நாட்டை விருத்தி செய்தான். .. தொடரும் அருகன்.      Read More »

தமிழர்களின் “தூக்கத்திலும்”, “துக்கத்திலும்” சிங்களம் விழித்துக்கொள்கின்றது… அருகன். - பாகம்2

ஏனைய செய்திகள்

வட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு சீன பாதுகாப்புத் துறையினர் ஒத்துழைப்பு // வன்னியில் நீண்டகாலம் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம்..!

வட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு சீன பாதுகாப்புத் துறையினர் ஒத்துழைப்பு // வன்னியில் நீண்டகாலம் பணியாற்றிய ஆசிரியர்கள் இடமாற்றம்..!

வட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு சீன பாதுகாப்புத் துறையினர் ஒத்துழைப்பு..!
இலங்கையின் வட பகுதியில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளுக்கு சீன பாதுகாப்புத் துறையினர் ஒத்துழைப்பு வழங்க இணங்கியுள்ளனர். வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலக்கண்ணிவெடி அகற்றும் பணிகளை சீன அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, ஆலோசனை வழங்க உள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி ஸெஹ் சீ, இராணுவக் கேணல்கள், லெப்டினன்கள், மேஜர்கள் உள்ளிட்ட உயர் இராணுவ அதிகாரிகள் இலங்கைக்கு [...]

ஐரோப்பிய ஒன்றியத்தின் தரச் சான்றிதழ் பெற முடியாதுபோனால் இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 150மில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் // வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ளும் பணிகள் நாளையுடன் நிறைவடைகின்றன...!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தரச் சான்றிதழ் பெற முடியாதுபோனால் இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 150மில்லியன் டொலர்களை இழக்க நேரிடும் // வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ளும் பணிகள் நாளையுடன் நிறைவடைகின்றன…!

ஐரோப்பிய ஒன்றியத்தின் தரச் சான்றிதழ் பெற முடியாதுபோனால் இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 150மில்லியன் டொலர்களை இழக்க நேரிடும்..!
ஐரோப்பிய ஒன்றியத்தின் தரச் சான்றிதழ் பெற முடியாதுபோனால் இலங்கைக்கு வருடாந்தம் சுமார் 150மில்லியன் டொலர்களை இழக்க நேரிடுவதுடன் சுமார் 2லட்சம் மீனவர்கள் தொழிலை இழக்க நேரிடும் என கடற்றொழில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரட்ண தெரிவித்துள்ளார். இதனை நிவர்த்திக்கும் நோக்குடன் இந்து சமுத்திர ரூனா ஆணைக் குழுவின் அங்கத்துவத்தை பலப்படுத்துவதுடன் அடுத்தாண்டு ஆணைக்குழுவின் மாநாட்டை இலங்கையில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர [...]

கனடாவில் நாயை பலாத்காரப்படுத்திய இலங்கையர் கைது // கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தடைசெய்ய நடவடிக்கை..!

கனடாவில் நாயை பலாத்காரப்படுத்திய இலங்கையர் கைது // கையடக்கத் தொலைபேசிகளில் ஆபாசப் படங்களைத் தடைசெய்ய நடவடிக்கை..!

கனடாவில் நாயை பலாத்காரப்படுத்திய இலங்கையர் கைது..!
கனடாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த 51வயதுடைய அஞ்சலோ அபயவிக்ரம என்பவர் நாயை பலாத்காரபடுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற சந்தேகத்தின்பேரில் கடந்த மேமாதம் கைது செய்யப்பட்டார். இவரது வழக்கு நேற்று முன்தினம் கனடா நீதிமன்றில் வாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நாயின் உறுப்பில் பலாத்காரமாக ஆணுறையினை அணிவித்து சித்திரவதை செய்ததால் அந்நாய் பரிதாபமாக துடிதுடித்த சம்பவத்தின் பின்னணியில் சம்பந்தப்பட்டவர் என்ற சந்தேகத்தின்பேரிலேயே அந்நபர் கைதுசெய்யப்பட்டார். மிருகவதை சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த சந்தேகநபரின் விசாரணை [...]

13வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய 45 வயதானவர் கைது..!

13வயது சிறுமியை வல்லுறவுக்குட்படுத்திய 45 வயதானவர் கைது..!

13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் 45 வயதான நபர் ஒருவரை வெலிவேரிய பொலிஸார் கைது செய்துள்ளனர். கம்பஹா மாவட்டம் வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த மேற்படி நபர், குறித்த சிறுமியின் பாட்டியார் சந்தைக்குச் சென்றிருந்தபோது அவ்வீட்டில் தனிமையிலிருந்த சிறுமியை வல்லுறவுக்குட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. மேற்படி நபர் அவ்வீட்டுக்குள் இருந்த நிலையில் அயலவர் ஒருவர் கொடுத்த தகவலையடுத்து பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி கம்பஹா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுதிக்கப்பட்டாள். சந்தேகநபர் [...]

பேருவளைப் பகுதியில் சட்டவிரோத வானொலி நிலையம் முற்றுகை // வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகள் விடயம் தொடர்பான வழக்கு..!

பேருவளைப் பகுதியில் சட்டவிரோத வானொலி நிலையம் முற்றுகை // வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த புலிகள் விடயம் தொடர்பான வழக்கு..!

பேருவளைப் பகுதியில் சட்டவிரோத வானொலி நிலையம் முற்றுகை..!
பேருவளைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வானொலி நிலையமொன்றை நேற்று பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர். பேருவளைப் பகுதியில் தமது ஒலிபரப்புச் சேவைகளை வழங்கி வந்த வானொலி நிலையமொன்றை நேற்று பொலிஸார் திடீர்ச் சோதனைக்கு உட்படுத்தியதாகவும் இதன்போது ஒலிபரப்புச் சேவைக்கான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. எப்.எம் அலைவரிசையூடாக இலங்கை முழுவதிலும் குறித்த வானொலியானது தமது நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வந்ததாகவும் அந்த வட்டாரத் [...]

வாகரை பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேற்றம் // கண்டியில் கருக்கலைப்பு செய்த தாய் மரணமானது தொடர்பில் விசாரணை..!

வாகரை பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேற்றம் // கண்டியில் கருக்கலைப்பு செய்த தாய் மரணமானது தொடர்பில் விசாரணை..!

வாகரை பிரதேச செயலர் பிரிவில் மீள்குடியேற்றம்..!
மட்டக்களப்பு வாகரை பிரதேச செயளாளர் பிரிவில் இன்று காலை 70 குடும்பங்கள் மீளக்குடியேற்றம் செய்யப்பட்டன. கடந்த 2006 இராணுவ நடவடிக்கையின்போது இடம்பெயர்ந்து கதிரவெளி, சித்தங்கேணி, பால்சேனை, வம்மிவெட்டுவான் போன்ற பகுதிகளில் உறவினர், நண்பர்கள் வீடுகளில் இவர்கள் தங்கியிருந்தனர். சுமார் 5 வருடங்களின் பின்னர் இவர்கள் தோணிதாண்டமடு கிராமத்தில் இன்று மீள்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
கண்டியில் கருக்கலைப்பு செய்த தாய் மரணமானது தொடர்பில் விசாரணை..!
கண்டியில் கருக்கலைப்பு செய்த தாயார் பெண்ணொருவர் உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். [...]

மருதமடு முன்னாள் புலி உறுப்பினர்கள் உள்ள புனர்வாழ்வு முகாமில் கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு // யாழில் நாட்டைவிட்டு வெளியேறியோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கத் தீர்மானம்..!

மருதமடு முன்னாள் புலி உறுப்பினர்கள் உள்ள புனர்வாழ்வு முகாமில் கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு // யாழில் நாட்டைவிட்டு வெளியேறியோரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கத் தீர்மானம்..!

மருதமடு முன்னாள் புலி உறுப்பினர்கள் உள்ள புனர்வாழ்வு முகாமில் கையடக்கத் தொலைபேசிகள் மீட்பு..!
மன்னார் மருதமடு புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வளிக்கப்பட்டு வரும் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் தம்மிடம் இரகசியமான முறையில் மறைத்து வைத்திருந்த 17 கையடக்க தொலைபேசிகள் உட்பட பல உபகரணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபாய மெதவல தெரிவித்துள்ளார். சில கையடக்க தொலைபேசிகளை அவர்கள் தமக்கு தேவையான நேரத்தில் பயன்படுத்திய பின்னர் புதைத்து வைத்திருந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய புலிகளின் சந்தேகநபர்கள் வெளிநாடுகளுக்கு [...]

வடக்கின் அபிவிருத்திக்காக புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை-அரசாங்கம் // பொலிஸ் உத்தியேகாத்தரை திட்டிய இன்ஸ்பெக்டர் குறித்து வழக்கு..!

வடக்கின் அபிவிருத்திக்காக புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை-அரசாங்கம் // பொலிஸ் உத்தியேகாத்தரை திட்டிய இன்ஸ்பெக்டர் குறித்து வழக்கு..!

வடக்கின் அபிவிருத்திக்காக புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை-அரசாங்கம்..!
வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றபோது ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் மேற்படி தெரிவித்துள்ளார். எமது நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் சட்டத்திற்கு முரண்படாத வகையிலும் தமிழ் மக்களின் நலன் கருதி வடக்கின் அபிவிருத்திக்காக விடுதலைப் புலிகளின் நிதியை பயன்படுத்துவதில் தவறில்லை எனவும் அவர் [...]

யாழ். வாக்காளர்களை பதிவுசெய்வது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமளிப்பு // றுகுணு பல்கலை மாணவன் கொலை விடயமாக மனித உரிமைக்குழுவிடம் புகார்..!

யாழ். வாக்காளர்களை பதிவுசெய்வது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமளிப்பு // றுகுணு பல்கலை மாணவன் கொலை விடயமாக மனித உரிமைக்குழுவிடம் புகார்..!

யாழ். வாக்காளர்களை பதிவுசெய்வது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் விளக்கமளிப்பு..!
யாழ். குடாநாட்டில் வாக்காளர்களைப் பதிவுசெய்வது தொடர்பாக பிரதேசமட்ட ரீதியில் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கும் நடவடிக்கைகளை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்றுமுதல் ஆரம்பித்துள்ளனர். இவர்களது இச்செயற்பாட்டுக்கு மனித உரிமைகள் இல்லம் வாகன உதவி மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியுள்ளது. வாக்காளர் பதிவுகள் தொடர்பாகக் கிராமரீதியில் போதிய விளக்கம் இன்மையால் அவர்கள் இதில் பெரும்நாட்டம் காட்டவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இச்செயற்பாடில் ஈடுபடவுள்ளனர். மக்கள் வாக்காளர்களாகத் தம்மைப் பதிவு [...]

படகில் வரும் அகதிகளால் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதாக மெல்பேர்ன் கல்வியாளர் தெரிவிப்பு // எந்த குற்றவாளியையும் அரசாங்கத்தின் சாட்சியாளராக, அவரின் உதவியை பெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமுண்டு-அரசாங்கம்..!

படகில் வரும் அகதிகளால் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதாக மெல்பேர்ன் கல்வியாளர் தெரிவிப்பு // எந்த குற்றவாளியையும் அரசாங்கத்தின் சாட்சியாளராக, அவரின் உதவியை பெற்றுக்கொள்ள சட்டத்தில் இடமுண்டு-அரசாங்கம்..!

படகில் வரும் அகதிகளால் தேவையற்ற பிரச்சினைகள் எழுவதாக மெல்பேர்ன் கல்வியாளர் தெரிவிப்பு..!
படகுமூலம் இலங்கை அகதிகள் உட்பட்டவர்கள் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்பதால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதாக மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தின் ஹர்வினாஸ் என்கிற கல்வியாளர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் அவுஸ்திரேலிய எல்லைப்புறத்தைப் பாதுகாப்பதில் தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அகதிகள் விடயத்தில் விவாதிப்பதிலும் தோல்வி கண்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். படகுப்பயணம் மிகவும் அபாயகரமானது. எனினும் கடத்தல்காரர்களால் அரசியல் நோக்கம்கொண்டு மக்கள் அவுஸ்திரேலியாவிற்குள் அழைத்துவரப்படுகின்றனர். இந்நிலையில் அவுஸ்திரேலியா தமது எல்லைப்புறங்களையும், கடற்பிராந்தியத்தையும் பாதுகாக்க வேண்டியது [...]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துரையாட அழைப்பது தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து // அனைத்துக் கட்சிக்குழுவின் தீர்மானங்கள் தூதரகங்களிடமும், தமிழ்க் கட்சிகளிடமும் கையளிப்பு..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துரையாட அழைப்பது தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து // அனைத்துக் கட்சிக்குழுவின் தீர்மானங்கள் தூதரகங்களிடமும், தமிழ்க் கட்சிகளிடமும் கையளிப்பு..!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் கலந்துரையாட அழைப்பது தொடர்பில் புளொட் தலைவர் த.சித்தார்த்தன் கருத்து..!
தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் கூடி கலந்துரையாடிவரும் தமிழ்க்கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமது கலந்துரையாடலில் இணைத்துக்கொள்ள முயற்சித்து வருகின்றன. இது தொடர்பில் இந்தக் கட்சிகள் கோரிக்கைக் கடிதமொன்றினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்; தலைவர் ஆர்.சம்பந்தனிடம் கையளிப்பதற்கும் தீர்மானித்துள்ளன. இதனடிப்படையில் இக்கோரிக்கைக் கடிதத்தினை நேரடியாகவே அவரிடம் கையளிக்கவிருப்பதாக புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றியமையாதது என்றும் [...]

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 24மணிநேர சேவைக்கு 1750அழைப்புகள் // நாட்டையும் கட்சியையும் பாதுகாத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதே சிறீமாவோ பண்டாரநாயக்கவிற்கு நாம் செய்யும் கௌரவமாகும்-ஜனாதிபதி..!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 24மணிநேர சேவைக்கு 1750அழைப்புகள் // நாட்டையும் கட்சியையும் பாதுகாத்து நாட்டு மக்களின் எதிர்காலத்தை சுபீட்சமாக்குவதே சிறீமாவோ பண்டாரநாயக்கவிற்கு நாம் செய்யும் கௌரவமாகும்-ஜனாதிபதி..!

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 24மணிநேர சேவைக்கு 1750அழைப்புகள்..!
சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல் வழங்குவதற்கான 24 மணிநேர தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் நேரடி தொலைபேசிக்கு நாடளாவிய ரீதியில் இருந்து இதுவரை 1750 அழைப்புகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் தலைவி அனோமா திசாநாயக்க தெரிவித்துள்ளார். சிறுவர் துஷ்பிரயோகம் பற்றிய தகவல்களை வழங்குவதற்கான இந்த நேரடி தொலைபேசி கடந்த 22ம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டது. 1929 என்ற எண்ணில் 24 மணிநேரமும் இலவசமாக எவரும் சிறுவர் துஷ்பிரயோகம் [...]

ஒன்பது தமிழ்க் கட்சிகள் புளொட் அலுவலகத்தில் சந்திப்பு // மல்வத்த பீடாதிபதியும், தலதா மாளிகையின் தியவதன நிலமேயும் வவுனியாவுக்க விஜயம்..!

ஒன்பது தமிழ்க் கட்சிகள் புளொட் அலுவலகத்தில் சந்திப்பு // மல்வத்த பீடாதிபதியும், தலதா மாளிகையின் தியவதன நிலமேயும் வவுனியாவுக்க விஜயம்..!

ஒன்பது தமிழ்க் கட்சிகள் புளொட் அலுவலகத்தில் சந்திப்பு..!
ஒன்பது தமிழ் கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகள் அரங்கம் நேற்று புளொட் அலுவலகத்தில் கூடி ஆராய்ந்தது. தமிழ் தேசியக் கூட்டமைப் பினையும் தமிழ் கட்சிகள் அரங்கத்தில் இணைத்துக் கொள்வதற்காக ஒன்பது கட்சிகளினதும் பிரதிநிதிகள் கையெழுத்திட்ட கடிதமொன்றை கூட்டமைப்புக்கு அனுப்பி வைப்பது குறித்து இச்சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டதாக முன்னாள் எம்.பி. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். புளொட் அலுவலகத்தில் நேற்று நண்பகல் ஒரு மணியளவில் ஆரம்பமான இச்சந்திப்பு சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை நீடித்தது. உத்தியோகபூர்வமாக [...]

மங்கள சமரவீரவை படுகொலை செய்ய முயன்ற இருவருக்கு கடூழிய சிறை // வேலணை குடும்பநல உத்தியோகத்தரின் சடலம் கொழும்புக்கு அனுப்பிவைப்பு..!

மங்கள சமரவீரவை படுகொலை செய்ய முயன்ற இருவருக்கு கடூழிய சிறை // வேலணை குடும்பநல உத்தியோகத்தரின் சடலம் கொழும்புக்கு அனுப்பிவைப்பு..!

மங்கள சமரவீரவை படுகொலை செய்ய முயன்ற இருவருக்கு கடூழிய சிறை..!
சிறீலங்கா சுதந்திரக்கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீரவை படுகொலைசெய்ய முயற்சித்த இரண்டு பேருக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மங்கள சமரவீரவை படுகொலை செய்வதற்காக புலிகளுக்கு தகவல்களை வழங்கிய இரண்டு பேருக்கு 11ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2006ம் ஆண்டில் கொழும்பு அல்லது மாத்தறை ஆகிய இடங்களில் மங்கள சமரவீரவை படுகொலைசெய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. சீ.ஜீ.ரணவீர எனப்படும் மல்லி மற்றும் சம்பத் துசாரா ஆகியோருக்கு இவ்வாறு [...]

வவுனியா வாடிவீட்டு அறையில் ஒருவர் இறந்துகிடந்த நிலையில் மீட்பு // பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக  இராணுவத்தைவிட்டு தப்பியோடிய பெண் புகார்..!

வவுனியா வாடிவீட்டு அறையில் ஒருவர் இறந்துகிடந்த நிலையில் மீட்பு // பொலிஸ் உத்தியோகஸ்தர்களால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாக இராணுவத்தைவிட்டு தப்பியோடிய பெண் புகார்..!

வவுனியா வாடிவீட்டு அறையில் ஒருவர் இறந்துகிடந்த நிலையில் மீட்பு..!
வவுனியா வாடிவீட்டு அறையில் ஒருவர் இறந்துகிடக்க காணப்பட்டார். இவர் இங்கு சிற்றூழியராக கடமையாற்றி யவர். மின்விசிறியில் கயிற்றில் தூங்கியவாறு இவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. அறைக்கதவு மூடப்பட்ட நிலையில் இருந்தபோது கதவை உடைத்து திறந்து பார்த்தபோது இவரது சடலம் தொங்கியவாறு காணப்பட்டது. இவர் சிலாபத்தைச் சேர்ந்த 23வயதான இளைஞன் எனவும் வாடிவீட்டுக்கு இரு வாரத்திற்கு முன்னர்தான் வேலைக்கு வந்தவர் எனவும் விசாரணையின்போது தெரியவந்துள்ளது. மரணத்திற்கான காரணத்தைச் கண்டறிய விசாரணைகள் தொடர்கின்றன.
பொலிஸ் [...]

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ{க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை // அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள்..!

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ{க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை // அனுமதிப்பத்திரம் இன்றி இயங்கும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள்..!

வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ{க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை..!
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ{க்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை அடுத்தவாரம் சபாநாயகர் சமல் ராஜபக்ஸவிடம் ஐக்கிய தேசிய கட்சி கையளிக்கவுள்ளது. ஐ.நா. செயலர் பான் கீ முனிற்கு இலங்கை விவகாரம் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர் குழு நியமித்தமைக்கு எதிராகவே இந்த பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. நாடாளுமன்ற பாரம்பரியத்தின்படி, நம்பிக்கையில்லாப் பிரேரணை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவது அரசுக்கு எதிரான மிக வலிமையான செயற்பாடாகும். நாடாளுமன்றத்தின் நம்பிக்கையை அரசாங்கம் பெற்றிருப்பது அவசியம். பொதுவாக அரசியலமைப்பின் 49(2) [...]

வவுனியாவில் மீள்குடியமர்ந்த மக்களுக்கு நிவாரணம் நிறுத்தம்..!

வவுனியாவில் மீள்குடியமர்ந்த மக்களுக்கு நிவாரணம் நிறுத்தம்..!

யுத்தத்தின் பின்னர் வவுனியா வாரிக்குட்டியூர், ரன்கெத்காமம் கிராமங்களில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் வழங்கிவந்த உலர்உணவு பொருட்கள் இன்று நிறுத்தப்படவுள்ளதாக வவுனியா அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார். மீள்குடியேற்றப்பட்ட மக்கள் தமது வாழ்வாதார தொழில்களை தொடங்கும் வரை இந்த உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படும் என அரசாங்கம் முன்னர் வாக்குறுதியளித்திருந்தது. விவசாய கிராமான வாரிக்குட்டியூர் கிராமத்தில் இதுவரை விவசாயத்திற்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்நிலையில் மீள்குடியேற்றப்பட்ட மக்கள் வாழ்வாதாரத்திற்காக அந்த கிராமத்தை விட்டு வேறு இடங்களுக்கு செல்லும் நிலைமை [...]

4611ஏக்கர் நிலப்பரப்பை வன்னியில் வசப்படுத்தியுள்ள படைத்தரப்பு // 07 ஹோட்டல்களின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்..!

4611ஏக்கர் நிலப்பரப்பை வன்னியில் வசப்படுத்தியுள்ள படைத்தரப்பு // 07 ஹோட்டல்களின் நிர்மாணப்பணிகள் ஆரம்பம்..!

4611ஏக்கர் நிலப்பரப்பை வன்னியில் வசப்படுத்தியுள்ள படைத்தரப்பு..!
9 வீதிக்கு கிழக்காக உள்ள முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம், முறிகண்டி, இந்துபுரம், சாந்தபுரம், செல்வபுரம் பிரதேசங்களை உள்ளடக்கிய 4611ஏக்கர் நிலப்பகுதி படையினரின் பயன்பாட்டிற்காக அரசாங்கம் சுவீகரித்துள்ளதாக உத்தியோகப்பற்றற்ற முறையில் மக்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் வளப்படுத்தப்பட்ட குடியிருப்புகள் வயல்காணிகள் தென்னை பனை உள்ளிட்ட நிரந்தர வருமானங்களைப் பெற்றுக் கொள்ளக் கூடிய பயிர்கள் குழப்பிரதேசங்களைக் கொண்ட மக்கள் பாரம்பரியமா 3 தசாப்தத்திற்கு மேல் குடியிருந்த பெருநிலம் படையினரால் அபகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. அண்மையில் முல்லைத்தீவு அரச [...]

வவுனியா நகரசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதில்லையென மூன்று கட்சிகள் தீர்மானம்..!

வவுனியா நகரசபையின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பதில்லையென மூன்று கட்சிகள் தீர்மானம்..!

வவுனியா நகரசபையின் மாதாந்தக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), பொதுஜன ஐக்கிய முன்னணி ஆகிய மூன்று கட்சிகளைச் சேர்ந்த எட்டு உறுப்பினர்கள் நகரசபையின் நிர்வாக சீர்கேடுகள் தொடர்பாக 29விடயங்களை முன்வைத்து கையெழுத்திட்டு வவுனியா நகரசபை தலைவர், உபதலைவர், செயலாளர் ஆகியோர்க்கு எதிராக அறிக்கையொன்றை சபையில் சமர்ப்பித்தனர். குறித்த விடயங்கள் தொடர்பாக சரியான விளக்கம் தந்தால் கடந்தகாலங்கள்போல் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவோம் என்றும் இல்லையேல் ஒத்துழைப்புக்களை வழங்க [...]

மட்டக்களப்பில் சோதனைகள் தொடர்கின்றன // சங்ஹாய் இளைஞர் நட்புறவு முகாமில் இலங்கை சார்பில் 19மாணவர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு..!

மட்டக்களப்பில் சோதனைகள் தொடர்கின்றன // சங்ஹாய் இளைஞர் நட்புறவு முகாமில் இலங்கை சார்பில் 19மாணவர்கள் கலந்துகொள்ள ஏற்பாடு..!

மட்டக்களப்பில் சோதனைகள் தொடர்கின்றன..!
யுத்தம் முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இராணுவத்தினர் வீடுகளை சோதனையிடும் நடவடிக்கைகள் தொடர்வதாக மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் பிரதேசத்தில் இராணுவத்தினர் வீடு வீடாக சென்று சோதனை நடத்தியுள்ளனர். சுமார் 600 இராணுவத்தினர் கடந்த ஞாயிற்றுக் கிழமை பல மணிநேரம் வீடு வீடாக சென்று சோதனைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. கிராமத்தை சுற்றிவளைத்த இராணுவத்தினர் எவரையும் வெளியேற விடாது இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். தேடுதலின்போது கைதுசெய்யப்பட்ட மூன்று பொதுமக்கள் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டனர். [...]

இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளுக்குச் செல்ல மக்கள் பிரதிநிதிகளுக்கு பூரண அனுமதி // இடம்பெயர்ந்த மக்களில் 35,333பேர் மாத்திரமே இன்னும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர்..!

இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளுக்குச் செல்ல மக்கள் பிரதிநிதிகளுக்கு பூரண அனுமதி // இடம்பெயர்ந்த மக்களில் 35,333பேர் மாத்திரமே இன்னும் மீளக்குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர்..!

இடம்பெயர்ந்த மக்கள் வாழும் பகுதிகளுக்குச் செல்ல மக்கள் பிரதிநிதிகளுக்கு பூரண அனுமதி..!
இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள முகாம்களுக்கும் மீளக்குடியமர்ந்துள்ள பிரதேசங்களுக்கும் மக்கள் பிரதிநிதிகள் செல்வதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மக்கள் பிரதிநிதிகள் தற்போது எந்தத் தடையும் இன்றி சுதந்திரமாக சென்றுவர முடியுமென்று பாதுகாப்பு விவகாரங்கள் மற்றும் அமைச்சரவை பேச்சாளரான தகவல், ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் தகவல் [...]

வேலணை மருத்துவ உத்தியோகத்தரின் சடலம் தோண்டியெடுப்பு // இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு..!

வேலணை மருத்துவ உத்தியோகத்தரின் சடலம் தோண்டியெடுப்பு // இந்தியப் பிரதிநிதிகள் இலங்கை வருகைக்கு இலங்கை அரசாங்கம் வரவேற்பு..!

வேலணை மருத்துவ உத்தியோகத்தரின் சடலம் தோண்டியெடுப்பு..!
யாழ். வேலணை வைத்தியசாலையின் குடும்பநல மருத்துவ உத்தியோகத்தரான தர்ஷிகாவின் உடல் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதிபதி இரா. வசந்தசேனன், சாவகச்சேரி, ஊர்காவற்றுறை, யாழ்ப்பாணம் ஆகிய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், யாழ். போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி, கைதடி கிராம அலுவலர் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை சடலம் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து தோண்டி எடுக்கப்பட்டது. கடந்த 10ஆம் திகதி வைத்தியசாலையில் தூக்கில் [...]

தமிழ்க் கட்சிகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை..!(புகைப்படங்கள் இணைப்பு)

தமிழ்க் கட்சிகள் கொழும்பில் சந்தித்துப் பேச்சுவார்த்தை..!(புகைப்படங்கள் இணைப்பு)

தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தொடர்பில் ஆராயும் வகையில் தமிழ் கட்சிகள் இன்றுபிற்பகல் கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளன. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான சி.சந்திரகாந்தன், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, ஈழ ஏதிலியர் மறுவாழ்வுக் கழகத்தின் தலைவர் செ.சந்திரகாசன், ஜனநாயக மக்கள் முன்னணியின் செயலரும், மேல் மாகாணசபை உறுப்பினருமான ந.குமரகுருபரன், சிறீ தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் [...]

நானுஒயா, டெஸ்போட் தோட்ட லயன் வீட்டுத்தொகுதிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன // அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிபற்றி ஜப்பானுக்கு விளக்கம்..!

நானுஒயா, டெஸ்போட் தோட்ட லயன் வீட்டுத்தொகுதிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன // அரசியலமைப்பு சீர்திருத்த முயற்சிபற்றி ஜப்பானுக்கு விளக்கம்..!

நானுஒயா, டெஸ்போட் தோட்ட லயன் வீட்டுத்தொகுதிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன..!
நுவரெலியா, நானுஒயா, டெஸ்போட் தோட்டத்தில் நான்கு லயன் வீட்டுத்தொகுதிக் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன. இதில் ஒரு லயன் வீட்டுத்தொகுதியில் உள்ள 14 வீடுகள் முற்றாக சேதமாகியுள்ளதோடு இவ் வீடுகளில் உள்ள அனைவரும் உடனடியாக அகற்றப்பட்டு தற்காலிக கூடாரங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நேற்றுமாலை சம்பவ இடத்திற்கு விஜயம் செய்த நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் நுவரெலியா பிரதேச அனர்த்த நிவாரண முகாமைத்துவத்தின் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட வீட்டு [...]

பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வழக்கு ஒத்திவைப்பு // சிரேஷ்ட பிரிகேடியர்கள் ஐவர், மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு..!

பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வழக்கு ஒத்திவைப்பு // சிரேஷ்ட பிரிகேடியர்கள் ஐவர், மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்வு..!

பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் வழக்கு ஒத்திவைப்பு..!
பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை கட்டாய விடுமுறையில் அனுப்பும் தீர்மானத்திற்கு எதிராக, தாக்கல் செய்த அடிப்படை உரிமைமீறல் வழக்கு செப்டெம்பர் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவை கட்டாய விடுமுறையில் அனுப்பும் தீர்மானம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்தார். உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி சட்டமா அதிபர் நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், அவருக்கு இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை. மே 25ம் திகதி இந்த தற்காலிக [...]

ரவி கருணாநாயக்கவின் வழக்கு இரத்து // மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதி, தேத்தாதீவு பகுதியில் விபத்து, குடும்பஸ்தர் பலி..!

ரவி கருணாநாயக்கவின் வழக்கு இரத்து // மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதி, தேத்தாதீவு பகுதியில் விபத்து, குடும்பஸ்தர் பலி..!

ரவி கருணாநாயக்கவின் வழக்கு இரத்து..!
வெளிநாட்டு நாணயக் கட்டுப்பாட்டுச் சட்ட மீறல் தொடர்பாக, தனக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் நடந்த வழக்குச் செயற்பாடுகளை ஆட்சேபித்து ரவி கருணாநாயக்க தொடுத்த வழக்கை உயர் நீதிமன்றம் இன்று ரத்துச் செய்தது. நீதிபதிகள் ஷிராணி பண்டாரநாயக்கா, என்.ஜி. அமரதுங்க, பி.ஏ. ரட்நாயக்க ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாமே இன்று இவ்வழக்கை தள்ளுபடி செய்தது. மேல் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில் ரவி கருணாநாயக்க மற்றும் நக்ஸியா கோர்பரேட் கன்சல்டன்ட்ஸ் (பிரைவேட் லிமிடட்), லின்கன் பியசேன [...]

மரண அறிவித்தல்..!

மரண அறிவித்தல்..!

மரண அறிவித்தல்..!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் சர்வதேச அமைப்பாளர் தோழர் மித்திரனின் தந்தை அந்தோனிமுத்து மரியாம்பிள்ளை  இன்று (26) அதிகாலை காலமானார். தந்தையின் பிரிவுத் துயரில் எமது இதயம் கனத்து கண்கள் கலங்கி நிற்கின்றது. தோழர் மித்திரன் அவரது சகோதரிகள் அம்மா மற்றும் உறவினர்களுடன் எங்கள் துயரங்களையும் பகிர்ந்து கொள்கின்றோம். ஆறுதல் சொல்ல வார்த்தை இல்லாமல் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்கள் ஆதரவாளர்கள் நண்பர்கள் அனைவரும் உறைந்து போயிருக்கின்றோம். நாளைய தினம் நவாலி தெற்கு மானிப்பாய் [...]

சர்வகட்சிப் பேரவை அறிக்கை தொடர்பில் அதன் தலைவருக்கும், உறுப்பினர்களுக்குமிடையில் முரண்பாடு // சகல புலி சந்தேகநபர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க முடியும்-புனர்வாழ்வு ஆணையாளர்..!

சர்வகட்சிப் பேரவை அறிக்கை தொடர்பில் அதன் தலைவருக்கும், உறுப்பினர்களுக்குமிடையில் முரண்பாடு // சகல புலி சந்தேகநபர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க முடியும்-புனர்வாழ்வு ஆணையாளர்..!

சர்வகட்சிப் பேரவை அறிக்கை தொடர்பில் அதன் தலைவருக்கும், உறுப்பினர்களுக்குமிடையில் முரண்பாடு..!
சர்வகட்சிப் பேரவை அறிக்கை தொடர்பில் அதன் தலைவருக்கும், உறுப்பினர்களுக்குமிடையில் முரண்பாடான நிலை ஏற்பட்டுள்ளது. சர்வகட்சிப் பேரவையின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரணவினால், ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்ட இறுதி அறிக்கை சட்டரீதியானதல்ல என பேரவையின் உறுப்பினர் ஆர்.யோகராஜன் தெரிவித்துள்ளார். அண்மையில் பாராளுமன்றில் தாம் சமர்ப்பித்த அறிக்கையின் சட்டரீதியான தன்மை குறித்து, தலைவர் திஸ்ஸ வித்தாரண கேள்வி எழுப்பியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு, பேரவையின் தலைவர் திஸ்ஸ [...]

கே.பி அரசியலில் ஈடுபடும் சாத்தியமில்லை-பிரதியமைச்சர் முரளிதரன் // வீசா கோரும் அதிக இலங்கையர்கள் போலழ ஆவணங்களை சமர்ப்பிக்கின்றனர்-பிரித்தானியா..!

கே.பி அரசியலில் ஈடுபடும் சாத்தியமில்லை-பிரதியமைச்சர் முரளிதரன் // வீசா கோரும் அதிக இலங்கையர்கள் போலழ ஆவணங்களை சமர்ப்பிக்கின்றனர்-பிரித்தானியா..!

கே.பி அரசியலில் ஈடுபடும் சாத்தியமில்லை-பிரதியமைச்சர் முரளிதரன்..!
புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் அரசியலில் ஈடுபடக் கூடிய சாத்தியம் கிடையாது என மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தெரிவித்துள்ளார். புலிகளின் சார்பில் சர்வதேச ரீதியில் ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களை குமரன் பத்மநாதன் மேற்கொண்ட போதிலும், அரசியல் தொடர்பான எவ்வித ஞானமோ அனுபவமோ குமரன் பத்மநாதனுக்கு கிடையாது என கருணா சுட்டிக்காட்டியுள்ளார். அரசாங்கத்தினால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் குமரன் பத்மநாதன், பல்வேறு [...]

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என ஒருபோதும் குறிப்பிட்டதில்லை-ஜனாதிபதி // வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையாளர்களுக்கு உயர் தொழில்நுட்ப அறிவை வழங்கும் திட்டம்..!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என ஒருபோதும் குறிப்பிட்டதில்லை-ஜனாதிபதி // வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறையாளர்களுக்கு உயர் தொழில்நுட்ப அறிவை வழங்கும் திட்டம்..!

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என ஒருபோதும் குறிப்பிட்டதில்லை-ஜனாதிபதி..!
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும் என தாம் ஒருபோதும் குறிப்பிட்டதில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எனினும், பாராளுமன்றத்தில் அங்கம் வகிப்பதனை தாம் பெரிதும் விரும்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மக்களின் அபிலாஷைகளுக்கு ஏற்ற வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனை சில சக்திகளின் தேவைக்காக அரசியல் அமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளத் தயாரில்லை. ஐக்கிய [...]

உள்ளுராட்சி மன்ற பிரச்சினைகள் பற்றி தொலைபேசியூடாக புகார் செய்ய ஏற்பாடு // பதினேழு முறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண் கைது..!

உள்ளுராட்சி மன்ற பிரச்சினைகள் பற்றி தொலைபேசியூடாக புகார் செய்ய ஏற்பாடு // பதினேழு முறை நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பெண் கைது..!

உள்ளுராட்சி மன்ற பிரச்சினைகள் பற்றி தொலைபேசியூடாக புகார் செய்ய ஏற்பாடு..!
உள்ளுராட்சி மன்றங்களால் தீர்க்கப்படாதிருக்கும் பிரச்சினைகள் குறித்து தொலைபேசி ஊடாக புகார் தெரிவிக்கவென உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சு விஷேட பிரிவொன்றை அமைத்துள்ளது. உள்ளுராட்சி, மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் ஆலோசனைக்கு அமைய இப்பிரிவு ஸ்தாபிக்கப்பட்டிருப்பதுடன் இது கடந்த சனியன்று திறந்து வைக்கப்பட்டதாகவும் அமைச்சின் அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றங்களினால் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் குறித்து இப்பிரிவில் புகார்செய்ய முடியும். அதேநேரம் தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் குறித்து தேவையான ஆலோசனைகளையும், [...]

கிழக்கு பல்கலை கழக விரிவுரையாளர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் // தனியார் பஸ் உரிமையாளர் சங்க போராட்டம் கைவிடப்பட்டது..!

கிழக்கு பல்கலை கழக விரிவுரையாளர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் // தனியார் பஸ் உரிமையாளர் சங்க போராட்டம் கைவிடப்பட்டது..!

கிழக்கு பல்கலை கழக விரிவுரையாளர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில்..!
கிழக்கு பல்கலை கழக விரிவுரையாளர்கள் இன்று பணிபகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்கலைக்கழகத்தின் 5 முக்கிய பீடங்களான மருத்துவபீடம், கலை-கலாசாரபீடம், அரசியல்-விஞ்ஞான பீடம், வர்த்தக-முகாமைத்துவபீடம் உட்பட அனைத்து பீட நடவடிக்கைகளும் ஸ்தம்பிதமடைந்துள்ளன. நாடளாவியரீதியில் நடைபெற்றுவரும் பல்கலைகழக விரிவுரையாளர்களின் சம்பள உயர்வு போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியே இப்போராட்டம் இடம்பெறுவதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வந்தாறுமூலை, கல்லடி, அரசடி போன்ற இடங்களில் கிழக்கு பல்கலைக்கழக பீடங்கள் செயற்பட்டுவருகின்றன. [...]

வவுனியா வர்த்தகர்கள் ஹர்த்தால் // ஐ.தே.கட்சி தலைமையகம் முன்பாக தீக்குளித்தவர் உயிரிழப்பு..!

வவுனியா வர்த்தகர்கள் ஹர்த்தால் // ஐ.தே.கட்சி தலைமையகம் முன்பாக தீக்குளித்தவர் உயிரிழப்பு..!

வவுனியா வர்த்தகர்கள் ஹர்த்தால்..!
வவுனியா வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் குற்றம் சுமத்தி வவுனியா வர்த்தகர்கள் இன்று ஹர்தால் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா வர்த்தகர் ஒருவர் வெள்ளிக்கிழமை கடத்தப்பட்டு சனிக்கிழமை விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆவரிடம் 6லட்சம் ரூபா கப்பம் கோரியதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்விவகாரம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனக் கூறி வவுனியா வர்த்தகர்கள் இன்று ஹர்ததால் நடவடிக்கையில் ஈடுபட்டனர். கடத்தல்காரர்களைக் கைது செய்யவேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஐ.தே.கட்சி தலைமையகம் முன்பாக தீக்குளித்தவர் [...]

ஜெனரல் பொன்சேகா வழக்கு அக்டோபர் 13ம் திகதிக்கு ஒத்திவைப்பு // இடமாற்றம் பெற விரும்பும் ஆசிரியர்கள் தென்மராட்சி வலயக்கல்வி நிர்வாகப் பிரிவுடன் தொடர்புகொள்ள அறிவிப்பு..!

ஜெனரல் பொன்சேகா வழக்கு அக்டோபர் 13ம் திகதிக்கு ஒத்திவைப்பு // இடமாற்றம் பெற விரும்பும் ஆசிரியர்கள் தென்மராட்சி வலயக்கல்வி நிர்வாகப் பிரிவுடன் தொடர்புகொள்ள அறிவிப்பு..!

ஜெனரல் பொன்சேகா வழக்கு அக்டோபர் 13ம் திகதிக்கு ஒத்திவைப்பு..!
ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கெதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைக்கும் தன்னை இராணுவக் காவலில் வைத்திருப்பதற்கும் எதிராக தொடுத்த வழக்கு விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் ஒக்டோபர் 13ம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. நீதிபதிகள் சத்யா ஹெட்டிகே (தலைவர்), டபிள்யூ. எல்.ரஞ்சித் சில்வா, அனில் குணரட்ன ஆகியோர் முன்னிலையில் இவ்விடயம் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது பொன்சேகாவின் சட்டத்தரணிகள் எதிர் மனுவொன்றை நீதிமன்றில் தாக்கல் செய்தனர். இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜகத் [...]

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 56)-சித்திறெஜினா..!

சூதாடிய தருமனும் துகிலுரிந்த துச்சாதனனும் (பாகம் 56)-சித்திறெஜினா..!

ஒரு உற்பத்திக் காலத்தில்.. கற்பத்தில் கனியாகி.. காலம் கனிந்த பின்.. மாதொரு மடியில் மகனாய் பிறந்து.. தவழ்ந்து புரண்டு தத்தி நடந்து .. மழலை மொழிந்து.. பின் எழுந்து நடந்து.. ஏடு படித்த‌ இளைஞனாகி.. கல்விக்குத் தக்க‌ கடமையும் புரிந்து.. வாலிப வயதில் மடந்தைகள் நோக்க‌… உள்ளம் புகுந்து உணர்வில் கலந்த உத்தமி ஒருத்தியின் கைத்தலம் பற்றி.. இல்லற வாழ்வின் இனிமையறிந்து.. பிள்ளைகள் பிறந்து நன்மைகள் புரிந்து.. உற்றம் சுற்றம் போற்றிட வாழ்ந்து.. முடிவில் ஒரு நாள் [...]

இலங்கை செல்ல இந்திய நடிகர்களுக்குத் தடையில்லை என தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்..!

இலங்கை செல்ல இந்திய நடிகர்களுக்குத் தடையில்லை என தென்னிந்திய நடிகர் சங்கம் தீர்மானம்..!

இந்திய நடிகர்கள் தொழில் ரீதியாகவோ அல்லது தனிப்பட்ட ரீதியாகவோ இலங்கைக்கு பயணிக்க முடியூம் என்றும் அப்படிச் செல்கின்றவர்களை தடுக்க முயற்சிப்பவர்கள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னையில் நேற்று நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதேவேளை சினிமாவில் ஏற்படும் இலாப நஷ்டங்களுக்கு நடிகர்களிடம் நட்டஈடு கோரமுடியாது என்றும் இக்கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நடிகர் சங்கத்தின் பொதுக் குழுக்கூட்டம் நேற்று சென்னையிலுள்ள நடிகர்சங்க வளாகத்தில் கூடியது. இதில் நடிகர் நடிகையர் இலங்கைக்கு செல்வது [...]

கிளிநொச்சியில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றவர் நையப் புடைக்கப்பட்டு பொலீசில் ஒப்படைப்பு // கண்ணிவெடி அகற்றும் பணியில் 45பெண்கள்..!

கிளிநொச்சியில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றவர் நையப் புடைக்கப்பட்டு பொலீசில் ஒப்படைப்பு // கண்ணிவெடி அகற்றும் பணியில் 45பெண்கள்..!

கிளிநொச்சியில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றவர் நையப் புடைக்கப்பட்டு பொலீசில் ஒப்படைப்பு..!
கிளிநொச்சி நகரப்பகுதியில் பாடசாலை மாணவி ஒருவரை பற்றைக்குள் இழுத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்த விற்பனைப் பிரதிநிதி ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வீட்டிற்குத் தனிமையில் திரும்பிக் கொண்டிருந்த மாணவியை வழிமறித்து அவரை வல்லுறவுக்கு உட்படுத்துவதற்கு விற்பனைப் பிரதிநிதி ஒருவர் முயற்சி செய்துள்ளார். வாயைப் பொத்தி பயமுறுத்திய விற்பனைப் பிரதிநிதியிடமிருந்து தப்புவதற்காக அந்த மாணவி [...]

றுகுணு பல்கலை மாணவன் மரணத்தைக் கண்டித்து களனி பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் // சிறிகோத்தா முன்பாக ஒருவர் தீப்பற்றிய சம்பவம்..!

றுகுணு பல்கலை மாணவன் மரணத்தைக் கண்டித்து களனி பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம் // சிறிகோத்தா முன்பாக ஒருவர் தீப்பற்றிய சம்பவம்..!

றுகுணு பல்கலை மாணவன் மரணத்தைக் கண்டித்து களனி பல்கலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்..!
மாத்தறை றுகுணு பல்கலைக்கழக மாணவனின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பாக பொலிஸாரினை குற்றம்சாட்டுகின்ற பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்பாட்டங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. பொலிஸாரின் அச்செயலைக் கண்டித்து களனி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டிருந்தனர்.
சிறிகோத்தா முன்பாக ஒருவர் தீப்பற்றிய சம்பவம்..!
கொழும்பு, கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயமான சிறி கொத்தாவிற்கு முன்னால் நபர் ஒருவர் தீப்பற்றிக் கொண்டுள்ளார். தற்போது மேலதிக சிகிச்சைகளுக்காக, இவர் களுபோவில வைத்தியசாலையில் [...]

மலிபன் மில்க் புரடக்ட் தனியார் நிறுவனத்திற்கு 7500 ரூபா அபராதம் விதிப்பு // கொழும்பு, எத்துல்கோட்டை சந்தியில் ஆயுதமுனையில் 19லட்சம் கொள்ளை..!

மலிபன் மில்க் புரடக்ட் தனியார் நிறுவனத்திற்கு 7500 ரூபா அபராதம் விதிப்பு // கொழும்பு, எத்துல்கோட்டை சந்தியில் ஆயுதமுனையில் 19லட்சம் கொள்ளை..!

மலிபன் மில்க் புரடக்ட் தனியார் நிறுவனத்திற்கு 7500 ரூபா அபராதம் விதிப்பு..!
முன்னிலை பாலுணவு உற்பத்தி நிறுவனமான மலிபன் மில்க் புரடக்ட் தனியார் நிறுவனத்திற்கு அநுராதபுரம் மேலதிக நீதவான் சந்திமா எதிரிமன்ன இன்று 7500 ரூபா அபராதம் விதித்துள்ளார். அந்நிறுவனம் தனது தயாரிப்புகளில் ஒன்றில் சில விசேட தன்மைகள் இருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் முறையான அனுமதியின்றி விளம்பரப்படுத்தியமையே இதற்குக் காரணம். இவ்வழக்கில் 8வது பிரதிவாதியான திருமலையைச் சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவரை நவம்பர் 26 ஆம் [...]

கொம்பனித்தெரு மியூஸ்வீதியில் உடைக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாற்று இடம்தேடும் முயற்சி // வவுனியா நகரசபைத் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்களுடைய பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது..!

கொம்பனித்தெரு மியூஸ்வீதியில் உடைக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாற்று இடம்தேடும் முயற்சி // வவுனியா நகரசபைத் சுகாதார சுத்திகரிப்பு தொழிலாளர்களுடைய பணிப்பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டது..!

கொம்பனித்தெரு மியூஸ்வீதியில் உடைக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாற்று இடம்தேடும் முயற்சி..!
கொழும்பு கொம்பனித்தெரு மியூஸ்வீதியில் உடைக்கப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களுக்கு மாற்று இடம்தேடும் முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டிருப்பதாக பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் உயர்நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலிற்கிணங்க நகர அபிவிருத்தி அதிகாரசபையால் கடந்த மேமாதம் 5ம்திகதி கொம்பெனித்தெரு பகுதியில் வீடுகள் உடைக்கப்பட்டதனால் பாதிக்கப்பட்டவர்களால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிப்பதற்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. இந்த முறைப்பாட்டில், நகர அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் பிரசன்ன [...]