சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும்: ஜுலி சங் !!

சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்பட வேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க துரதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ டுவிட்டர் பதிவினூடாக ஜுலி சங் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் அமைதியான அதிகார பரிமாற்றம் அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை, ஜனநாயக ஆட்சி மற்றும் சிறந்த எதிர்காலத்திற்கான மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் எனவும் இலங்கைக்கான அமெரிக்க துரதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.